Thursday, October 26, 2006

மரண தண்டனையும், மனிதாபிமானமும்

இங்கு நான் அப்சலைப் பற்றியோ, மரண தண்டனைப் பற்றியோ, சட்டம் பற்றியோ நான் பேசப்போவதில்லை. காரணம், இவற்றைப் பற்றி பேச எனக்கு போதிய அறிவும் அனுபவமும் இல்லை. ஆனால் வலைப்பதிவுகளில் நான் படித்த பல பதிவுகளில் இருந்து எனக்கு தோன்றிய சில சந்தேகங்களை உங்கள் முன் வைக்கிறேன் . . . . . .

இந்த சந்தேகங்கள் சரியா, இல்லை நான் பைத்தியக்காரணா, இல்லை விளம்பரம் தேடுகிறேனா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். .

குழலி, லக்கிலுக், ஜெயசங்கர் . . . . .மற்றும் பலரது மரணதண்டனைப் பற்றிய பதிவுகளை படித்துள்ளேன். குழலி, லக்கிலுக் மீது எனக்கு எந்த வித கோபமும் கிடையாது, அவர்களது பதிவுகளை நான் விரும்பிப் படிக்கிறேன். விஷயம் இதோ.


"கடவுள் தந்த உயிரைப் பறிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது"
- மகாத்மா காந்தி


இதை எல்லோரும் ஒத்துக்கொள்கிறோம்.


மேலும் பல பதிவுகளில் நான் படித்த சில முக்கிய வரிகள்.

"அன்பை பளிங்கில் பதிந்திடுங்கள், காயங்களைத் தூசிப்போல துடைத்திடுங்கள்"

- என்பது பாரசீக பழமொழி.///உயிரைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கும் நீதித்துறைக்கும் கூடாது///
"ஒரு சமூகத்தின் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் பொழுது, அந்த சமூகம் தன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை, தன்னுடைய எதிர் வன்முறையால் தான் எதிர்க்கும்"
இறைவனால் அல்லது இயற்கையால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் இந்த பூமியில் வாழ உரிமை உண்டு. இதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஒரு சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு உயிராக இருந்தாலும் அதன் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பது தானே உங்கள் வாதம்.


சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு உயிர் மனிதனாக இருந்தால் அவனை மன்னிக்கலாம், ஆனால் அதுவே வேறு உயிரணமாக இருந்தால், மொத்தமாக அவற்றை அழிப்பதில் எந்த தவறும் இல்லை என்று சொல்கிறீர்களா.


ஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசே செய்வது என்பது மிகப்பெரிய பாவம்.
என்று லக்கிலுக்கார் சொல்கிறார்.

பறவைக்காய்ச்சல் வந்து சிலர் இறந்த போது எத்துனை ஆயிரம் கோழிகளுக்கு மரண தண்டனை விதித்தோம். அதறகாக அந்த இனத்தை சேர்ந்த எத்துனை உயிர்களை கொன்று குவித்தோம். அதற்கு நீங்கள் எதிர்பு தெரிவித்தீர்களா. . . . . .

இதோ இன்னுமோரு உதாரணம்,மூன்று பேர் மரணத்திற்கு காரணம் சொல்லி 50,000 உயிர்களை கொன்று குவித்திருக்கிறது சீன அரசு.Dogs Killed in China
CHINA - 50,000 dogs killed to fight rabies

World Briefing | Asia: China: 50,000 Dogs Killed In Rabies Scare

Chinese county clubs to death 50,000 dogs


இப்படி இந்த உயிர்களை மொத்தமாக அழிக்காமல், சில பல கோடிகளை செலவு செய்து வேறு ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபடலாமே என்று நீங்கள் கேட்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை. அருந்ததி ராய் அக்கா என்ன செய்தார்களாம்.

வெட்டிப்பயல் அவர்களின் பதிவில், பின்னூட்டத்தில் கூட யாரும், அந்த உயிர்களுக்காக அனுதாபப் படவில்லை.

பிறகு ஏன் இவர்கள் அன்பை பற்றியும், உயிர்களைப் பற்றியும் பேசுகிறார்கள்.

தனக்கென்று ஒரு நியாமும்,
மற்றவற்கள் முன் வேறு ஒரு நியாயமும் ஏன் பேசுகிறீர்கள். . . . .

8 comments:

கார்த்திகேயன் said...

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க வெங்கட்...யோசிக்க வைத்த பதிவு...

இந்த விஷயத்தை மேனகா (காந்தி) அம்மாவும் கவனிக்கலையோனு தோணுது... பாரதத்திற்கு வெளியே சிலர் குரல் கொடுக்கமாட்டார்கள் போலிருக்கிறது.

மருத்துவ பரிசோதனைகளுக்கு, மிருகங்களை பயன்படுத்துவதை குறையுங்க'னு சொன்னாலே, 'அப்ப அந்த பரிசோதனையை உன்னை வைத்து பண்ணலாமா?' என்று எக்குத்தப்பா கேட்பார்கள் போலிருக்கிறது...

வெங்கட்ராமன் said...

யப்பா, யாராவது எதாவது சொல்லுங்கப்பா,

நான் சொல்றது சரியா, தப்பா ன்னு நானாவது தெரிஞ்சுக்கிறேன்.

வெங்கட்ராமன் said...

இங்க பாருங்க யாராவது இதுக்கு பதில் போடல, அப்புறம் தினமும் இதையே புது புது பதிவா போடுவேண்.

மேனகா காந்தி said...

/********************************
இங்க பாருங்க யாராவது இதுக்கு பதில் போடல, அப்புறம் தினமும் இதையே புது புது பதிவா போடுவேண்
*********************************/

வேண்ஞ்சாமி, இந்த ஒரு பதிவே போதும்.

கொஞ்சம் ஓவராத்தான் போரியோன்னு தோனுது.

சிறில் அலெக்ஸ் said...

இது ஜோக்கு பதிவுதானுங்களே?

:)

வெங்கட்ராமன் said...

/** இது ஜோக்கு பதிவுதானுங்களே? **/

அட, இது என் சந்தேகங்க . . . .

எத்தனை உயிர்களை கொள்றாங்க,

குழலிக்கும் லக்கிலுக்கும் ஏன் கோபம் வரவில்லைன்னு புரியல.

We The People said...

சரியா தான் இருக்கு உங்க வாதம். இதற்கு அவர்களிடம் பதில் கிடைக்காது. அவர்கள் திசை திருப்பி பதிவின் நோக்கத்தை காணாம பண்ணிடுவாங்க.

சந்தர்ப்பவாத பேச்சுக்கள் நீண்டுகொண்டுதான் போகும்.

வெங்கட்ராமன் said...

ஜெயசங்கர் அவர்களே தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

நீங்கள் சொல்வது சரிதான்.