Monday, January 01, 2007

இயக்குனர், தயாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை [#14]

இயக்குனர் ஷங்கர் சமூக அக்கறை கொண்டவர் என்பது, அவரது திரைப் படங்களில் இருந்தே தெரியும். அவரை நல்ல இயக்குனர் என்று மட்டுமே நினைத்து வந்தேன், அந்நியன் படத்திற்கு பிறகு தான் அவருக்கு இந்த சமூகத்தின் மீது இருந்த அக்கறையும் புரிந்தது.

Director Shankar

சமுதாயத்தின் மீதான என்னோட ஆதங்கத்தை ராமானுஜம் கேரக்டர் வெளிப்படுத்தும்
- ஷங்கர் (அந்நியன் பட்த்தைப் பற்றி அளித்த பேட்டியில்)


அந்நியன் படத்திற்கு பிறகு, ஒரு நல்ல இயக்குனர் என்று மட்டும் இல்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் அவரை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.

சரி இப்ப எதுக்கு அந்நியன் படத்த பத்தி இவ்வளவு லேட்டா பேசற, வேற ஏதும் சரக்கு இல்லயான்னு . . ? தானே கேக்க வற்றீங்க.. .. .. .. விஷயம் இருக்கு சொல்றேன், சும்மா ஒரு பில்டப்பு. இயக்குனர் ஷங்கரின் நேர்மையை தான் மேலே சொன்னேன். தாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை இதோ.. ... ... ...

நேற்று வெயில் படம் பார்த்தேன், வெயில் படம் பற்றி எல்லோரும் எழுதி விட்டார்கள். நான் கவனித்த விஷயங்கள், என்னைக் கவர்ந்த விஷயங்களை மட்டுமே நான் சொல்ல விளைகிறேன். படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது நல்ல படம் பார்த்த சந்தோஷம் இருந்தது மட்டும் இல்லாமல், அதன் பாதிப்பு அன்று முழுவதும் இருந்தது.

படத்தில் விளம்பர கம்பெனி வைத்திருப்பவராக பரத் வருகிறார், அவர் விளம்பரம் செய்வது எல்லாம் நம்மூரு பொருட்களுக்குதான், திலகராஜ் டெக்ஸ்டைல்ஸ், பவண்டோ, அனில் சேமியா, அபீஸ் காபி. . . . . . . . . . . . என்று பட்டியல் நீளுகிறது. தாயாரிப்பாளர் ஷங்கர் நினைத்திருந்தால் ஆட்டு மூத்திரம் அக்கா மாலாவுக்கோ(COKE), கப்சிக்கோ(PEPSI) அல்லது வேறு ஏதோ ஒரு வெளிநாட்டு கும்பெனிக்கோ பரத் விளம்பரம் செய்வது போல் காட்டி படம் வெளிவருவதற்கு முன்பே லாபம் பார்த்திருக்கலாம். அப்படி இல்லாமல் ராம்ராஜ் வேஷ்டிகள் என்று விளம்பரம் செய்வது போல் காட்டி இருப்பது அவர்து சமூக அக்கறை வெளிப்படுத்துகிறது.

Imasai Arasan

இம்சை அரசன் படத்தில் கூட COKE மற்றும் PEPSIக்கு எதிராக அவர் காட்சி அமைக்க ஒப்புக்கொண்டதையும் பாராட்ட வேண்டும். இம்சை அரசன் படத்தில் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, இண்டர்வெல்ல அந்த ஆட்டு மூத்திரத்த குடிக்கும் மக்களை பார்க்கும் போது சிரிப்பும் கோபமும் தான் வந்தது. ஏன்யா உங்களுக்கெல்லாம் மூளை இருக்கா, இல்லையா என்று கேட்க தோன்றியது. அப்படி கேட்ருந்தா, கும்மியிருக்க மாட்டாங்க.

சரி விடுங்க, நல்ல இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து, நல்ல படங்களை நமக்கு தந்த தயாரிப்பாளர் ஷங்கருக்கு நன்றி சொல்வோம், மேலும் நல்ல படங்கள் தர வாழ்த்துவோம்.

நம்மூர் பெரிய நட்சத்திரங்கள் எப்போது மாறப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்களாக COKE'' பாட்டிலுடன் விக்ரமையும், 'PEPSI' டின்னுடன் விஜயையும். 'MIRINDA' பாட்டிலுடன் விவேக் ஐயும் பார்க்க முடிவதில்லை, இது இப்படியே தொடர்ந்தால் நன்றாயிருக்கும். நம்ம சித்தி தான் அடங்க மாட்டேங்கிறாங்க.

13 comments:

Anonymous said...

good point to note in the moview

Anonymous said...

இதே சங்கர் வீட்டில் இருந்து தான் நம்ம வருமானவரிதுறையினர் 4 கோடி எடுத்தனர். இவரு ஊருக்கு தான் உபதேசம் செய்வார் தனக்கு இல்லை

ஜென்டில்மேன்

Anonymous said...

இதே சங்கர் வீட்டில் இருந்து தான் நம்ம வருமானவரிதுறையினர் 4 கோடி எடுத்தனர். இவரு ஊருக்கு தான் உபதேசம் செய்வார் தனக்கு இல்லை

ஜென்டில்மேன்

Anonymous said...

//இதே சங்கர் வீட்டில் இருந்து தான் நம்ம வருமானவரிதுறையினர் 4 கோடி எடுத்தனர். இவரு ஊருக்கு தான் உபதேசம் செய்வார் தனக்கு இல்லை//

உண்மை . நான் சொல்ல வந்தேன்.நீங்க சொல்லிட்டீங்க.
இதே அவர் இயக்க மட்டும் செய்யும் படங்கள் கோடியில் குளிப்பாட்டிவிட்டு , தானே இயக்கி தயாரித்த படத்தை(முதல்வன்) கிராபிக்ஸ் சுற்றி செலவை குறைத்த அறிவாளி தான் சங்கர்
VENDAN

வெங்கட்ராமன் said...

ஸ்ருதி அவர்களே தங்கள் வருகைக்கு நன்றி.

வெங்கட்ராமன் said...

அனானி நண்பரே,

//இதே சங்கர் வீட்டில் இருந்து தான் நம்ம வருமானவரிதுறையினர் 4 கோடி எடுத்தனர். இவரு ஊருக்கு தான் உபதேசம் செய்வார் தனக்கு இல்லை//

நீங்கள் எப்படி ஒழுங்காக வரி கட்டுகிறீர்களா. . ??????

வெங்கட்ராமன் said...

//இதே அவர் இயக்க மட்டும் செய்யும் படங்கள் கோடியில் குளிப்பாட்டிவிட்டு , தானே இயக்கி தயாரித்த படத்தை(முதல்வன்) கிராபிக்ஸ் சுற்றி செலவை குறைத்த அறிவாளி தான் சங்கர்
VENDAN //

VENDAN,
இமசை அரசன் படத்தை அவர் என்ன கிராபிக்ஸ்லயா எடுத்தார், அவரது தொழில்நுட்பத்தைப் பற்றி அந்த துறையை சார்ந்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.

Anonymous said...

//இமசை அரசன் படத்தை அவர் என்ன கிராபிக்ஸ்லயா எடுத்தார், அவரது தொழில்நுட்பத்தைப் பற்றி அந்த துறையை சார்ந்தவர்கள் தான் சொல்ல வேண்டும். //

I speak only "direct with production" movie by sankar. Not only participating in production.

வெங்கட்ராமன் said...

/// I speak only "direct with production" movie by sankar. Not only participating in production.

அது எப்படிங்க, புது இயக்குனர் அவரை நம்பி செலவு செய்திருக்கிறார் என்றால் பாராட்ட வேண்டும் அல்லவா.

எங்க செட் போடனும், எப்ப கிராபிக்ஸ் பன்னனும்னு இயக்குனர் ஷங்கருக்கு தெரியும், குறிப்பா அது இயக்குனர்களூக்கு தான் தெரியும், நீங்களும் நானும் எப்படி அதைப் பத்தி விவாதிக்க முடியும்.

Dharumi said...

எனக்கும் இப்போவெல்லாம் ஷங்கரை ரொம்ப பிடிச்சிப் போச்சு. அவர், தான் மட்டமான படங்களாக எடுத்தாலும், நல்ல படங்களைத் தயாரிக்கிறாரே, அதற்காக !

கோபிநாத் said...

அன்பு வெங்கட்,
நானும் வெயில் திரைப்படம் பார்த்தேன். இந்த விஷயத்தை கவனிக்கவில்லை பதிவை படித்தப் பிறகு தான் தெரிந்தது.
உண்மையில் பாராட்ட வேண்டியாவிஷயம் தான்.

உங்களையும் தான்

வெங்கட்ராமன் said...

தருமி சார், தங்கள் வருகைக்கு நன்றி.

//// தான் மட்டமான படங்களாக எடுத்தாலும், நல்ல படங்களைத் தயாரிக்கிறாரே

என்ன சார், அப்படி சொல்லீட்டிங்க. பாய்ஸ் படத்த மட்டும் வச்சு அப்படி சொல்லிவிட முடியாதுங்க. அந்நியன் படத்துல வற்ற ராமானுஜம் மாதிரி எல்லோரும் ரூல்ஸ கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டா நம்ப நாடு எங்கேயோ போயிடும்.

வெங்கட்ராமன் said...

கோபிநாத் தங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.