Thursday, February 15, 2007

என் காதலர் தின அனுபவம். . . .[#19]

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு வந்த காதலர் தினத்தை என்னால் மறக்க முடியாது, காரணம் என் காதலால் அல்ல யாரோ ஒரு பெண் யாரோ ஒரு பையன் மேல் கொண்ட காதலால். என்ன வித்தியாசமா இருக்கேன்னு நினைக்கிறீங்களா, விபரம் கீழே.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம், எங்கள் ஊரில் இருந்து தஞ்சைக்கு தினமும் பேருந்தில் சென்று வந்தேன். தினமும் எங்கள் ஊர் பேருந்து நிலையம் செல்வது வழக்கம். பேருந்து நிலையத்தில் உள்ள STD பூத்தை தினம் பார்க்க தவறுவதில்லை, காரணம் அதில் வேலை பார்க்கும் ஒரு பெண் தான் (காலேஜ் படிக்கிறப்ப வேற என்ன காரணம் இருக்க முடியும்). நிறத்துக்கும் அழகுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அந்த பெண்ணை பார்த்துதான் உணர்ந்து கொண்டேன் (சத்தியமா, வேற எந்த காரணமும் இல்லை, இது முனீஸ்வரர் மேலே சத்தியம்).

ஒரு காதலர் தினம் வந்தது, காலையில் காலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு, ஊருக்கு திரும்பிய போது STD பூத்தில் அந்தப் பெண்ணை காணவில்லை, வீட்டுக்கு திரும்பினேன். வழக்கம் போல் மறு நாள் பேருந்து நிலையம் சென்றேன், அந்த STD பூத்தில் அந்தப் பெண்ணை காணவில்லை. ஆனால் வேறு ஒரு வயதான பெண் கண்ணீர் விட்டு புலப்பிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. விசாரித்ததில் அந்த பெண்ணின் தாயார் அவர் என்பதும், நேற்று காதலர் தினத்தன்று, அந்தப் பெண் ஒரு பையனோடு ஊரை விட்டு சென்று விட்டதாக தெரிந்தது. அந்தப் பெண்ணின் தாயாரின் கண்ணீரை இன்று வரை மறக்க முடியவில்லை.

காதலில் தன்னை மறக்கிறவர்கள், தங்கள் சொந்தங்களையும் மறந்து விடுகிறார்கள்.
அவர்களின் சந்தோஷத்திற்காக, எத்தனை பேரை வருத்தப் பட வைக்கிறார்கள் . . . . . ?

இது தேவையா. . . . . . ?பெரும்பாலானோருக்கு காதல் வருவதே இல்லை,
காதல் வந்ததாகவே எண்ணிக்கொள்கிறார்கள். . . .

Wednesday, February 14, 2007

ஏர்போர்ட்டில் ரஜினிக்கு பதிலாக வேறு சில பிரபலங்கள் இருந்திருந்தால். . . [#18]

ஏர்போட்டில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் ரஜினி தலையிட்டு அவருக்கு நியாயம் கேட்கவில்லை என்று பத்திரிக்கையில் செய்தி வந்தது.

நடந்ததையெல்லாம் மீண்டும் அவரிடம் எடுத்துச் சொல்லி, இதில் என்ன தவறு இருக்கிறது? பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களாவது இதைத் தட்டிக் கேட்கக்கூடாதா?’ .
என்று ரஜினியிடம் கூறி இருக்கிறார்.

அன்று ஏர்போர்ட்டில் ரஜினிக்கு பதிலாக வேறு சில பிரபலங்களிடம் அந்த பெண் முறையிட்டிருந்தால் . . . . . . .
(ஒரு சின்ன கற்பனை)

நம்ம தயாநிதி மாறன் :

அப்படியா, இது என்ன அநியாயம், இதுதான் நீங்க வாடிக்கையாளர்களை நடத்துற விதமா என்று அதிகாரிகளை கடிந்து கொண்டு, போனில் சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பேசி அந்த பெண்மணியின் பிரச்சனைன்யை தீர்த்து வைக்கிறார்.

ரொம்ப நன்றிங்க என்று அந்த பெண்மணி சொல்ல, இது என் கடமைங்க, இத பிரஸ் மீட்ல சொல்லுங்க அப்பதான் இவங்களுக்கு புத்தி வரும் என்கிறார்.

சன் டி.வி க்கும் மற்ற பத்திரிக்கைகளுக்கும் போன் செய்து அவர்களை வரவைக்கிறார்.
(இடையில் பொது மக்கள் பிரச்சனையை தீர்த்து வைத்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் - விபரம் 8 மணி செய்தியில் என்று சன் டி.வி ல் கீழே செய்தி வருகிறது)


பத்திரிக்கை, டி.வி என்று எல்லோரும் வந்து விட, அவர்களிடம் நடந்த வற்றை விபரமாக கூறுகிறார். சன் டி.வி யில் வரப்போகிறோம் என்ற சந்தோஷத்துடன் Boarding Pass வாங்க வருகிறார் அந்த பெண்மணி.

விமான நிலைய அதிகாரிகள் அந்த பெண்மணியிடம் "நீங்க போக வேண்டிய விமானம் போய்விட்டது, இனிமேல் நாளை தான் விமானம், அதிலும் நீங்கள் புதிதாக டிக்கெட் வாங்கினால் தான் போகமுடியும் என்கிறார்கள்"

வெறுத்துப் போய் வீட்டுக்கு வரும் போது, சன் டி.வி யில் அவரது பேட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. . . . .


கமுதம் ஆசிரியர் திரு.சினிமா மலம் திண்ணி :

அம்மா இது உங்க பிரச்சனை, இதுல நான் என்ன பண்ண முடியும், நான் ஒரு பத்திரிக்கை ஆசிரியர எனக்கு நடிகைய நாய் கடிச்ச விவகாரம், நயன் தாரா சிம்பு விவகாரம், சினிமா கலைஞர்களின் அந்தரங்க விஷயம், மக்களுக்கு உபயோகம் இல்லாத விஷயம் இதுல தான் நான் தலையிட முடியும், பொது மக்களை பத்தி நான் கவலைப் பட முடியாது.

அவரிடம் இருந்து விலகி சென்று, செல் போனில்

ஹலோ, வற்ற இஷ்யூல "விமானத்திற்காக ஒரு மணி நேரம் காத்திருந்த அசின்" ன்னு ஒரு பக்க நீயூசுக்கு இடம் ஒதுக்குங்க, விபரத்த மெயில்ல அனுப்புறேன், விஷயத்தோட லேட்டஸ்ட் அசின் படத்தையும் போட்றுங்க

என்று சொல்லியபடி அங்கிருந்து நகர்ந்தார்.


விஜய டி.ராஜேந்தர் :

டேய் வித்தவுட்டு,
இந்தாடா கமர்கட்டு,
இல்லையா இவங்களுக்கு டிக்கெட்டு,
வீராசாமிக்கு இருக்கு கட்டவுட்டு,
இன்னைக்கும் ட்.ஆர் நாட் அவுட்டு,
சிம்புவுக்கு தான் டா மார்க்கெட்டு,
போடபேறேன் உனக்கு மாவு கட்டு,
இந்தா வீரா சாமி டிக்கெட்டு,
இத வச்சிக்கிட்டு,
கொடு இவங்களுக்கு விமான டிக்கெட்டு,

என்று வீராசாமி டிக்கெட்டை விசிறி அடிக்கிறார்

இவ்வளவு கிலோசப்பில் டி.ஆர் ஐ பார்த்து, அவர் DTS சவுண்டில் அரண்டு போண அதிகாரி, தன் மீது வீசப்பட்ட வீராசாமி டிக்கெட்டை வேகமாக தட்டிவிட்டு, அம்மா இந்தாங்க விமான டிக்கெட், என்ன ஆளை விடுங்க என்று மருத்துவமனைக்கு விரைகிறார்.வேறு சிலரிடம் முறையிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று, பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.