Thursday, March 01, 2007

லாலுவிடம் டியூசன் படிக்கும் ப.சிதம்பரம் [#20]

இந்த வருடமும் நல்ல பட்ஜெட்டை தாக்கல் செய்து, எல்லோருடைய பாராட்டுதலையும் பெற்று விட்டார் நம்ம ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ். அவருடைய இந்த நிர்வாக திறமையை குறித்து வியந்த நம்ம பிரதமர் மன்மோகன் சிங் அவரிடம் நிர்வாகம் பற்றி படித்து அவரைப் போலவே பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று, நம்ம வரி மந்திரி சாரி நிதி மந்திரி ப.சிதம்பரத்தை அவரிடம் டியூசன் அனுப்பி வைக்கிறார்.

லாலு டியூசனில் என்ன நடக்கிறது, இதோ. . . . . .

லாலு : வாய்யா சிதம்பரம், நம்ம பிரதமர் ரொம்ப உன்னோட நிலமைய நினைச்சி ரொம்ப வருத்தப் படராரு, உனக்கு மேனேஜ்மென்ட் பத்தி சொல்லிக் குடுக்க சொன்னார். நானும் என் மாட்டு தொழுவம் வேலையெல்லாம் ஒத்தி வச்சிட்டு வந்திருக்கேன், பாடத்த ஒழுங்கா கவனிக்கனும் என்ன. . . .

(ஹாவர்ட்ல MBA படிச்ச நான், இந்த ஆளுகிட்ட போய் மேனேஜ்மென்ட் படிக்கிற மாதிரி ஆயிடுச்சே, சரி விடு இவர எப்படியாவது நோஸ் கட் பண்ணி நாம பெரிய ஆளுன்னு இவருக்கு நிரூபிக்கனும். . . . என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு)

சிதம்பரம் : சரி சார்.

லாலு : இந்தா, பால் கோவா சாப்பிடு. எங்க வீட்ல பண்ணது.

சிதம்பரம் : ரொம்ப நல்லா இருக்கு சார்.

லாலு : பாடத்த ஆரம்பிப்போமா . . .

சிதம்பரம் : ஓகே, சார்.

லாலு : சரி, நான் ரயில்வே மினிஸ்டரா பதவி ஏற்கிரப்போ, ரயில்வே ரொம்ப நஷ்டத்தில இருந்தது. எனக்கு பதிலா நீ ரயில்வே மினிஸ்டரா ஆகியிருந்தா, வருமானத்த பெருக்க என்ன செய்வே. . . ?, சொல்லு.சிதம்பரம் : பூ. இவ்ளோதானா, வெரி சிம்பிள்

* டிக்கெட் விலைய ஏத்துவேன்.
* ரிசர்வேசன் சார்ஜ்அ இரண்டு மடங்காக்குவேன்.
* பிளாட்பாரம் டிக்கெட் விலையையும் ஏத்துவேன்.
* சரக்கு கட்டணத்த உயர்த்துவேன்.
* எங்கயாவது வரி போட வாய்ப்பிருக்கான்னு பார்ப்பேன், அப்படி இருந்தா வரி போட்ருவேன்.
அப்புறம்
* பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்ட மட்டும் ஏத்த மாட்டேன், ஏன்னா என் பையனோ, எங்க குடுமத்தில உள்ளவங்களும் அதுல தான் போவோம்.

லாலு : புத்திசாலி, கைய நீட்டு.

இன்னும் கொஞ்சம் பால் கோவா கொடுக்க போராருன்னு நினைச்சி, நம்ம சிதம்பரம் கைய நீட்டுகிறார்.

பக்கத்தில் வைத்திருந்த பிரம்பை எடுத்து, சர மாரியாக அடி கொடுக்கிறார் லாலு.

சிதம்பரம் : ஐயோ, வலிக்குது, வலிக்குது, விட்றுங்க (என்று அலருகிறார்)

லாலு : ரயில்வே, வருமானத்த பெருக்க வழி சொல்ல சொன்னா, மக்கள் ரயில்வே துறைய மறக்கறதுக்கு வழி சொல்ற.

சிதம்பரம் : வேற என்ன பண்றது,லாலு : நான் என்ன பண்ணேன்னு பாத்தியா. . . ?

சிதம்பரம் : இல்ல கவனிக்கல.

லாலு : அதெல்லாம் கவனிக்காத.

சிதம்பரம் : என்ன பண்ணீங்க கொஞ்சம் சொல்லுங்க.

லாலு : பொதுவாவே, வருமானதத அதிகப்படுதனும்னா, வாங்குறவன்கிட்ட அதிகமா வாங்க கூடாது, நாம எத்தன பேர் கிட்ட வாங்குறோமோ அவங்க எண்ணிக்கைய அதிகப் படுத்தனும். நான் என்ன பண்ணேன், சரக்கு போக்குவரத்த அதிகப் படுத்தினேன். மக்களுக்கு கஷ்டம் வராத மாதிரி வருமானத்த அதிகப் படுத்தினேன். அதனால என்னால டிக்கெட் விலையையும் குறைக்க முடிஞ்சது.

சிதம்பரம் : ஆமாம், இப்ப நான் என்ன பண்றது.

லாலு : அதையும் என்கிட்ட கேளு . . . ?

சிதம்பரம் : இல்ல எனக்கு வரி எப்படி போடனும்னு தான் தெரியும்.

லாலு : சரி கேளு, நம்ம நாட்ல இருக்குற 100 கோடி பேர்ல 2 கோடி பேர் தான் வரி கட்றாங்க, அதாவது 2 % பேர்தான், கரெக்டா. . . ?

சிதம்பரம் : கரெக்டு, கரெக்டு.

லாலு : அப்பன்னா அதிகமா வரி ஏய்பு நடக்குதுன்னு தானே அர்த்தம், இந்த 2 கோடி பேர்ங்கிறது 4 கோடியா ஆனாலே, மிகப்பெரிய சாதனை தான் இல்லியா.

சிதம்பரம் : ஆமா, ஆமா, எப்படி அதிகப்படுத்தறது.லாலு : மொதல்ல வருமான வரித்துறைய சீர்படுத்தனும், ஏன்னா அங்க ஒருத்தவன் 10,000 ரூபா லஞ்சம் வாங்குனான்னா, நமக்கு வரியா வரவேண்டிய 10 லட்ச ரூபா வராம போயிடும்னு அர்ததம். நாட்ல விவசாயம் மட்டும்தான் வீணா போய்கிட்டு இருக்கு, மத்த தொழில் எல்லாம் நல்லா தான வளருது, அப்படீன்னா நமக்கு வர வேண்டிய வரியும் அதிகமாகனும் தானே. . .?

வரி கட்றவன்கிட்ட அதிகமா வரி வாங்கறத பத்தி யோசிக்க கூடாது, வரியே கட்டாம இருக்கிறவன கண்டுபிடிச்சி அவன் கிட்ட வரி வாங்கனும், புரியுதா. . .?

சிதம்பரம் : புரியுது, புரியுது (என்று கையை பின்னால் கட்டிக்கொள்கிறார்.)

லாலு : அதென்ன சேவை வரி, அதுவும் 12.5 %


http://www.servicetax.gov.in/servicetax/overview/ovw_pt-4.htm


http://ws.ori.nic.in/cenexbbsr/service_tax_trade_notice.htm


நீயும் லிஸ்ட சேர்த்துகிட்டே போற. உட்டா பிச்சக்காரனுக்கு 1 ரூபா போட்டாலும் 12.5 காசு வரியா போடனும்னு சொல்லுவ போலிருக்கு.

சிதம்பரம் : (இத எப்படி கண்டு பிடிச்சாருன்னு நினைத்துக்கொண்டே. .) அப்படி எல்லாம் இல்ல சார்.

லாலு : வருசா வருசம் வரியெல்லாம் ஏத்திக்கிட்டே போரியே, உனக்கே இது நியாயமா படுதா. Educational Cess ன்னு கட்ற வரியில 2% ன்னு சொன்ன அத 2.5%, 3% ன்னு ஏத்திகிட்டே போரியே எப்பதான் நிருத்துவ.

சிதம்பரம் : அவங்கள நிருத்த சொல்லு, நான் நிருத்துறன்.

லாலு : யாரு நிருத்தனும், வரி கட்றவனெல்லாம் நிருத்துனாதான், நீ நிருத்துவ. டயலாக் அடிக்காம பாடத்த கவனி.

சிதம்பரம் : சரிங்க.

லாலு : வரி அதிகமா இருந்தாலே, அத கட்றதுக்கு மக்கள் விரும்ப மாட்டாங்க, மக்களுக்கு வரி கட்டவேண்டிய அவசியத்த புரிய வைக்கனும், அவங்கள கஷ்டப்படுத்தாம வரி வாங்கனும். அதே மாதிரி, வரி ஏய்பு செய்ரவங்களையும், அவர்களுக்கு துணை போற அதிகாரிகளையும் தண்டிக்கணும். நிர்வாகத்த தொடர்ந்து கண்கானிக்கனும், நீ உன் பையன தான் அதிகமா கவனிக்கிற, அவன பெரிய ஆளா ஆக்கதான் முயற்சி பண்ற. உன் பையனுக்கு திறமை இருந்தா(?) தானா பெரிய ஆளா ஆயிடுவான், தேவையில்லாத விளம்பரம் எல்லாம் பண்ணாத புரியுதா. . . ?

சிதம்பரம் : (மாட்ட குளிப்பாட்ற வேலை பார்த்துகிட்டே, நம்ம பையனோட கருடாஸ் அமைப்ப பத்தியும், தமிழ் நாட்ல ஒட்ன போஸ்டர பத்தியும் எப்படி தெரிஞ்சுகிட்டாரு, ஜெகஜால கில்லாடியா இருப்பாரு போல . . . என்று நினைத்துக்கொண்டு) புரியுது, புரியுது என்று வேகமாக தலையை ஆட்டுகிறார்.

லாலு : மொதல்ல "Save Tax" ன்னு பெருசா போட்டு வற்ற விளம்பரத்த எல்லாம் நிப்பாட்டு, வரின்னாலே, கட்ட கூடாது சேமிக்கனும்ன்கிற என்னத்தான் அது வளர்க்குது.

சிதம்பரம் : சரி, வரி சேமிக்கும் திட்டங்கள் எல்லாத்தையும் உடனே நிப்பாட்டிடலாம்.

லாலு : கைய நீட்டு. . . .

சிதம்பரம் : ம் மாட்டேன், ஏற்கனவே அடிச்சது இன்னும் வலிக்குது.

லாலு : வரிய சேமிக்கிற திட்டத்த நிப்பாட்ட சொல்லல, விளம்பரத்த தான் நிப்பாட்ட சொன்னேன், திட்டத்த நிப்பாட்றது சரி இல்ல.சிதம்பரம் : நல்லா புரியுது.

லாலு : சரி இன்னிக்கு இது போதும், அடுத்த கிளாஸ் எப்போன்னு அப்பறம் சொல்றேன், கிளம்பு. இந்தா, எங்க ஊர்ல சட்ட இல்லாம நிறைய பேர் இருப்பாங்க, அவங்க முதுகுலையும் எதாவது வரிய போட்றாத, பார்த்து பத்திரமா போ.

சிதம்பரம் : சரீங்க, நான் கிளம்புறேன்.

லாலு : சரி நீ கிளம்பு நான் போய் பால் கறக்கனும்.