உலகிலேயே இத்தனை விதமான பேருந்துகள் சென்னையில் மட்டும் தான் இயக்கப் படுகிறது என்று நினைக்கிறேன்,
| ரகம் | குறைந்த பட்ச கட்டணம் | |
| வெள்ளை போர்டு | 2 ரூபாய் | பேருந்து தடம் எண் மற்று செல்லும் ஊர் பெயர்கள் வெள்ளை கலர் பலகையில் எழுதப்படிருக்கும் |
| மஞ்சள் போர்டு | 2.50 ரூபாய் | பேருந்து தடம் எண் மற்று செல்லும் ஊர் பெயர்கள் மஞ்சள் கலர் பலகையில் எழுதப்படிருக்கும் |
| M சர்வீஸ் | 3 ரூபாய் | பேருந்து தடம் எண்ணிற்கு முண்பாக M என்ற எழுத்து இருக்கும், உதாரணம் M5 கவனிக்க. M5 வேறு 5M வேறு |
| எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (அல்லது) பச்சை போர்டு பேருந்துகள் | 5 ரூபாய் (கட்டணங்கள் எல்லாம் மஞ்சள் போர்டு வகை பேருந்து கட்டணத்தில் இரண்டு மட்டங்கு) | பேருந்து தடம் எண் மற்று செல்லும் ஊர் பெயர்கள் பச்சை கலர் பலகையில் எழுதப்படிருக்கும் |
| புளு லைன் | நீல வண்ணப் பேருந்து | |
| யெல்லோ லைன் | மஞசள் வண்ணப் பேருந்து | |
| ஆரஞ் லைன் | ஆரஞ்ச் வண்ணப் பேருந்து |
நான்கு வகையாக இருந்த பேருந்துகள் போதாது என்று புளு லைன், யெல்லோ லைன், ஆரஞ் லைன் வகை பேருந்துகளை அறிமுகப் படுத்தியது அரசு. இந்த புதுவகை பேருந்துகளில் அதிகம் இருப்பது டீலக்ஸ் பேருந்துகள் தான். இந்த டீலக்ஸ் வகை பேருந்துகளும் மஞ்சள் போர்டு பேருந்துகளின் கட்டணத்தைப் போல இரண்டு மடங்கு.

இத்தனை வகையான பேருந்துகள் இருந்தும், மக்களின் பேருந்துப் பயணம் என்பது மிகவும் கஷ்டமானதாகவே உள்ளது. குறிப்பாக டீலக்ஸ் வகை பேருந்துகள் தற்போது அதிகமாக இயக்கப் படுகின்றன, புதிதாக அறிமுகப் படுத்தும் பேருந்துகளும் டீலக்ஸ் வகைகளாகவே இருக்கின்றன. மாநகரப் பேருந்துகளில் தினசரிப் பயணம் செய்பவர்களுக்கு இந்த டீலக்ஸ் பேருந்துகள் பெரும் சுமையாகவே இருக்கின்றன. பீக் அவர்களில் பேருந்தை நம்பி இருப்போர் வரும் பேருந்து எந்த வகையை சேர்ந்தது என்று பார்த்து பொருமையாக செல்ல முடியாது. என்ன தான் சொகுசுப் பேருந்தாக இருந்தாலும் சரி சாதாரண பேருந்தாக இருந்தாலும் சரி கூட்ட நெரிசலில் செல்லும் போது எல்லாம் ஒன்றுதான்.தினமும் பேருந்துக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டி உள்ளது.
இத்தனை ரகப் பேருந்துகள் இருந்தும், இத்தனை ரக கட்டணங்கள் இருந்தும், எந்தப் பேருந்து எத்தனை மணிக்கு வரும், எப்போது போய் சேர்வோம் என்று எதையுமே உறுதியாக சொல்ல முடியாது.
இந்த வகை சொகுசுப் பேருந்துகளால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை எல்லா லாபமும் அரசாங்கத்திற்கே. நிர்வாகத்தை சீர் படுத்தி லாபம் அதிகரிக்கச் செய்யாமல் இப்படி மக்களை அடித்துப் பிடுங்குகிறது அரசாங்கம். எங்கள் ஊர்களில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் சென்று பாடம் கற்றுக்கொள்ள சோல்ல வேண்டும் போக்கு வரத்து அமைச்சரையும் அரசாங்க அலுவலர்களையும். மேலும் தனியார் பேருந்துகளில் வேலை செய்பவர்களுக்கு தொழிற்சங்கம் அமைப்பு என்று எதுவும் கிடையாது அதனால் தான் மக்கள் அவர்களால் பயண் அடைகிறார்கள்
ஏம்பா இருக்கறதே 10 ரூபா தான் இதுல 7 ரூவா டிக்கெட்டுங்கிறியே நான்
எப்படி திரும்பி வற்றதுன்னு கேட்ட ஒரு மூதாட்டியை அன்பாக பேசி அடுத்த நிறுத்ததில்
இறக்கி விட்டார் நடத்துனர்.
இப்படி பலரையும் கஷ்டப்படுத்துகிறது இந்த
சொகுசு(?) பேருந்துகள்
சரி விடுங்க பஸ்ஸுக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன். . ..

11 திட்டுகளும் குட்டுகளும்:
முதலில் நல்ல தரமான எழுத்துடன் கூடிய விவரப்பலகை வேண்டும்.எந்த பேருந்து எப்போது கிளம்பும் என்ற விபரம் பலருக்கும் தெரியும் படி வைக்கவேண்டும்.
இதை மேம்படுத்தினால் ரயில்வே மாதிரி லாபம் கொழிக்கும் துறையாக மாற்ற முடியும்.
http://www.bmtcinfo.com/english/index.htm
வாங்க வடுவூர் குமார் வருகைக்கு நன்றி.
/////////////////
எந்த பேருந்து எப்போது கிளம்பும் என்ற விபரம் பலருக்கும் தெரியும் படி வைக்கவேண்டும்.
/////////////////
பேருந்து நிலையத்த்தில் ஒரே நேரத்தில் ஒரே வழித்தடத்தில் இங்க பல பேருந்துகள் நிற்கும். எது எப்ப போகும் என்று யாருக்கும் தெரியாது.
அனானி அண்ணாச்சி வருகைக்கு நன்றி.
நீங்கள் கொடுத்த வலை தளத்திற்கு சென்றேன் முழுமையாக பார்க்க முடியவில்லை.
வெங்கட்ராமன், சென்னை நடத்துனர்கள் வானளாவிய அதிகாரம் மிக்கவர்கள் என்கிறார்களே அப்படியா?
//////////////////
வெங்கட்ராமன், சென்னை நடத்துனர்கள் வானளாவிய அதிகாரம் மிக்கவர்கள் என்கிறார்களே அப்படியா?
//////////////////
எனக்கும் அப்படித்தான் தோனுது செல்வேந்திரன்.
தங்கள் வருகைக்கு நன்றி.
நான் லண்டனில் வசிப்பவன். இங்கு எல்லா பேருந்து நிறுத்தத்திலும் கீழ்காணும் விவரங்கள் இருக்கும்.
1, அந்த நிறுத்த்ததில் நிற்கும் அனைத்து பேருந்துகளின் எண்கள்
2, ஒவ்வொரு பேருந்தும் செல்லும் வழித்தடத்தின் மொத்தவிவரம் (வழித்தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களின்(ஸ்டாப்) பெயர்கள்) மற்றும் நீங்கள் எந்த நிறுத்தத்தில் உள்ளீர்கள்.
3, அந்த பேருந்தில் எதிர்த்திசையில் போனால் அந்த வழித்தடத்தின் மொத்தவிவரம் (வழித்தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களின்(ஸ்டாப்) பெயர்கள்)
4, பேருந்து போகும் வழித்தடங்களின் முக்கியமான இடங்கள்(உதாரணமாக ரயில்நிலையங்கள், சுற்றுலாத்தளங்கள்)
5, எந்தெந்த நாட்களில், எந்தெந்த நேரத்தில் எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை அந்த பேருந்து வரும்(உதாரணமாக திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒன்று)
6, சில இடங்களில் GPRS தொழில்நுட்பம் மூலமாக அடுத்த பேருந்து எத்தனை நிமிடங்களில் நீங்கள் இருக்கு நிறுத்தத்திற்கு வந்து சேறும்.
7, ஒரு வரைபடத்தில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் உள்ள வழித்தடங்கள் ,தெறுக்களின் பெயர்கள் மற்றும் முக்கியமான இடங்கள் (மருத்துவமனை, ரயில் நிலையம் போன்றவை) இருக்கும்.
நம்ம ஊரு எப்ப இப்படி ஆகப்போகுது

நன்றி அனானி உங்கள் தகவலுக்கும் வருகைக்கும்.
//////// நம்ம ஊரு எப்ப இப்படி ஆகப்போகுது
நம்மில் மாற்றம் வரும் போது எல்லாவற்றிலும் மாற்றம் வரும்.
/////////////////////////////
இத்தனை வகையான பேருந்துகள் இருந்தும், மக்களின் பேருந்துப் பயணம் என்பது மிகவும் கஷ்டமானதாகவே உள்ளது
/////////////////////////////
சென்னை பேருந்துகளைப் பற்றி சொல்லி இருக்கீங்க.
நீங்க செல்றது சரிதான்.
(எழுத்து நடையில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை.)
எனது வளைக்கு வருதை தந்ததிற்க்கு நன்றி.
தமிழை பற்றிய கறுத்தரங்கத்தில் தலந்து கொல்லங்கள்.
நன்றி....
www.thedal-mahadeer.blogspot.com
Post a Comment