Monday, June 18, 2007

ஏன் நாம் இப்படி ? [#27]

சென்ற வாரம் நடந்த சம்பவம் இது. பதிவாக எழுத வேண்டிய சம்பவம் இல்லை என்றாலும் என்னுள் எழுந்த எண்ணங்களும் கோபங்களுமே இந்தப் பதிவு.டீலக்ஸ் பஸ்கள் போக சாதா பஸ் வரும் வரை காத்திருந்தேன். அரை மணி நேரம் காத்திருந்தலின் பயணாக சாதாரண பேருந்து கிடைத்தது. பேருந்து கொஞம் முக்கலும் முனகலுமாக நகர ஆரம்பித்தது. சிக்னலில் பேருந்தின் இயக்கத்தை நிறுத்திய ஓட்டுனர் மீண்டும் இயக்க முயற்சி செய்ய மீண்டும் அதே முக்கலும் முனகலும்.ஏம்பா அதான் மக்கர் பண்ணுதுன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏன் சிக்னல்ல வண்டிய நிப்பாட்ற . . .?

சரி வாங்கப்பா கொஞ்சம் வண்டிய தள்ளுங்க.என்று நடத்துனர் சொல்லிக் கொண்டே இறங்கி பேருந்துக்கு பின்னால் சென்றார். பேருந்தில் அதிகமான கூட்டம் இல்லை என்றாலும் எல்லா குறைந்தது 50க்கும் அதிகமானவர்கள் இருப்பார்கள் என்பது என் கனிப்பு. சரி என்று பேருந்தில் இருந்து இறங்கி சென்று பேருந்தை தள்ள ஆயத்தமானேன். பேருந்தில் இருந்த 50 பேர்களில் அதை தள்ள முற்பட்டவர்கள் என்னையும் சேர்த்து வெறும் 3 பேர் தான்.அய்யா வாங்க
சார் வாங்க
கொஞ்சம் தள்ளுங்க.
வண்டி இங்கேயே
நின்னுச்சுன்னா டிராபிக் ஜாம் ஆயுடும். . . . .
வாங்க
என்று நடத்துனர் வெற்றிலை பாக்கு வைத்து கல்யானத்திற்கு அழைப்பதைப் போல் அழைக்க மெலும் நான்கு பேர் வந்து சேர்ந்து கொண்டனர். மற்றவர்கள் எல்லாம் பேருந்துக்குள்ளேயே அமர்ந்திருந்தனர்,பேருந்தை தள்ளும் போது சற்றே கனத்தது, பேருந்தல்ல என் இதயம்.ஒரு வழியாக பேருந்து இயங்க ஆரம்பிக்க பேருந்தில் ஏறினேன். மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நான் அமர்ந்திருந்த இருக்கை எங்கே என்று தெரியவில்லை எல்லாம் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது.இந்த அளவிற்கா நாம் அறிவிழந்து சுயநலவாதியாகி விட்டோம். நாம் செல்லும் பேருந்து நின்று போய்விட்டது. நம் முயற்சியின்றி அதை இயங்க வைக்க முடியாது. அப்படி அது இயங்காமல் நின்று போனால் பாதிப்பு நமக்கு தான். இதை உணராமல் யாராவது நாலு இளிச்ச வாயங்க போய் தள்ளுவாங்க நாம வக்கனையா உட்கார்ந்திருப்போம் என்றுநாம் ஏன் இப்படி இருக்கிறோம்.நாம் சென்று கொண்டிருக்கிற பேருந்தை சரியாக இயங்க வைக்க கூட நாம் முன் வராத போது நம்முடைய சமுதாயம் நல்ல முறையில் நடக்க நாம் என்ன செய்ய போகிறோம்.நாம் ஏன் இப்படி . . . . .?

13 comments:

மதுசூதனன் / Madhusudhanan said...

நீங்கள் சொல்லும் விஷயம் என்னவோ வருந்தத் தக்க ஒரு விஷயம் தான். ஆனால் அதைவிடவும் எனக்கு மிகவும் வருத்தமளித்த விஷயம் நம் போக்குவரத்துக் கழகங்கள் செயல்படும் விதம் தான்.

பயணம் செய்ய பணமும் கொடுத்துவிட்டு, பேருந்தையும் தள்ளிவிட்டு. என்னவோ போங்க.... இதெல்லாம் போகட்டும். யாருக்காவது இந்த நிறுத்ததிற்கு இந்தப் பேருந்து இத்தனை மணிக்கு வரும் என்பது நிச்சயமாய்த் தெரியுமா? தெரியாது.... இவ்வளவு சம்பளம் வாங்கும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஏன் தங்களது பேருந்துகளை சரிவர பராமரிப்பதில்லை? இதனால் பொது மக்களுக்கு எவ்வளவு நஷ்டம் மற்றும் கஷ்டம் ஏற்படுகிறது? அதைப் பற்றி இங்கு எவரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.

வடுவூர் குமார் said...

நாம் சென்று கொண்டிருக்கிற பேருந்தை சரியாக இயங்க வைக்க கூட நாம் முன் வராத போது நம்முடைய சமுதாயம் நல்ல முறையில் நடக்க நாம் என்ன செய்ய போகிறோம்.
வெளியில் இருந்து ஆட்களைக்கொண்டு சரி செய்வோம்.
என்னத்தை சொல்வது!!

வீ. எம் said...

//இந்த அளவிற்கா நாம் அறிவிழந்து சுயநலவாதியாகி விட்டோம்\\
இப்படியே பழகிவிட்டது.. விரைவில் இது மாறும் என்று நம்புவோம்..

சென்னையில் பேருந்து தள்ளுவது தினம் வாடிக்கை என்ற நிலை சற்று மாறி இப்போது ஒரளவுக்கு பரவாயில்லை என்று ஆகியுள்ளது... மேலும் முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது..
வீ எம்

செல்வேந்திரன் said...

என்ன வெங்கட்ராமன் சிங்காரச் சென்னையில் வாழ்ந்துகிட்டு இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி? எவன் செத்தா எனக்கென்னங்றதுதான் சென்னைத் தமிழனின் மனநிலையாக இருக்கின்றது? சென்னையின் ஒவ்வொரு அங்குலத்திலும் ஏதாவது ஒரு மனிதாபிமானம் அற்ற செயல்கள் ஆக்ரமித்து இருக்கும். நீங்க வெளியூர்காரரா இருக்கிறதுனால உங்களுக்கு இதெல்லாம் கஷ்டமாபடுது. போக போக சரியாயிடும்.

வெங்கட்ராமன் said...

மதுசூதனன் தங்கள் வருகைக்கு நன்றி.

///////////////////////////////
இவ்வளவு சம்பளம் வாங்கும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஏன் தங்களது பேருந்துகளை சரிவர பராமரிப்பதில்லை?
///////////////////////////////

என்னுடைய முந்தைய பதிவில் நான் சொன்னது.

தனியார் பேருந்துகளில் வேலை செய்பவர்களுக்கு தொழிற்சங்கம் அமைப்பு என்று எதுவும் கிடையாது அதனால் தான் மக்கள் அவர்களால் பயண் அடைகிறார்கள்

வெங்கட்ராமன் said...

நன்றி வடுவூர் குமார்

வெங்கட்ராமன் said...

வீ.எம் தங்கள் வருகைக்கு நன்றி.

////////////////////////////
இப்படியே பழகிவிட்டது.. விரைவில் இது மாறும் என்று நம்புவோம்..
////////////////////////////

என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம்.

வெங்கட்ராமன் said...

///////////////////////////////
சென்னையின் ஒவ்வொரு அங்குலத்திலும் ஏதாவது ஒரு மனிதாபிமானம் அற்ற செயல்கள் ஆக்ரமித்து இருக்கும்
///////////////////////////////

செல்வேந்திரன் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

தங்கள் வருகைக்கு நன்றி.

Anonymous said...

சென்னையில இதெல்லாம் சாதாரணமப்பா. . . . . . .

வெங்கட்ராமன் said...

அனானி அண்ணாச்சி நீங்க பொறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை தான் போலிருக்கு.

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாவ்.. என்ன ஒரு சூப்பரான பதிவு! :-)

மிகவும் அழகா எழுதியிருக்கீங்க. அந்த பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்கணும். நடந்ததை எண்ணி வருந்தணும். இனி இது போல செய்யக்கூடாது என்று அவங்க திருந்தணும்..

அங்கே சென்னையில மட்டும் இப்படி நடக்கிறதில்ல. இங்கே கோலா லம்பூரிலும் இதேதான் நடக்குது. :-(

வெங்கட்ராமன் said...

வாங்க .:: மை ஃபிரண்ட் ::.

என்னது பதிவு பக்கம் ஆளையே கானும்னு நினைச்சேன். தாங்கள் கொடுத்த உற்சாகத்திற்கு நன்றி.

வெங்கட்ராமன் said...

நம்ம புது டெம்ப்ளேட் எப்படீன்னு யாராவது சொல்லுங்களேன் . . . . .