Monday, June 25, 2007

எனக்குள் நான் எட்டிப்ப் பார்த்து போட்ட 8 விஷயங்கள் [#28]

நம்மள பத்தி 8 விஷயம் சொல்லனும்னு நம்மள இங்க கோத்து விட்ட குசும்பன் அவர்களுக்கு நன்றிய சொல்லிட்டு விஷயத்துக்கு வருவோம்.

கீழே சொல்லப் பட்ட விஷயங்கள் கதையோ கற்பனையோ அல்ல சொந்த வாழ்வில் நடந்த சுவாரசியங்கள் மட்டும் தான். . . . .

1. ஒன்னாவது படிக்கும் போது 1 வது ரேங்க் வாங்கியது.

அதுக்கப்புறம் அந்த மாதிரி எந்த தப்பையும் நான் பண்ணல.

சே என்னடா இது மார்க்கெல்லாம் 100, 90, 95 வாங்கிட்டு ரேங்க் மட்டும் ஒன்னு வாங்கிட்டோமே. வீட்டுக்கு போய் ஒரு ரேங்கு தான் வாங்கிருக்கேன்னு சொன்னா அடி தான் கிடைக்கும் சரி இனிமே எப்படியாவது படிச்சு 100 வது ரேங்க் வாங்கனும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு

டீச்சர் கிட்டே கேட்டேன்.

யாரு டீச்சர் 100 வது ரேங்க் . . . . . ?

100 வது ரேங்கெல்லாம் கிடையாது, கிளாஸ்ல எத்தன பேரு இருக்காங்களோ அத்தன ரேங்கு தான்.

சரி டீச்சர்.

(1 2 3 . . . . . . . . . எப்படியாவது படிச்சு கிளாஸ்லயே பெரிய ரேங்க் வாங்கனும் என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டேன்.)

2. இது உண்மையிலேயே சாதனை தான்.

டேய் டேய் டேய் அந்த புள்ளைய இறக்கி விடுடா என்று என் சித்தி கத்திக் கொண்டு வரும் போதே தம்பி புள்ளைய இறக்கி விட்ருங்க என்று அந்த குழந்தையின் தாயார் ஓடிவந்து கெஞ்சினார், அவரிடம் கொடுக்கும் போது இல்ல கீழயே இறக்கி விட்ருங்க என்று கேட்க கீழே இறக்கி விட்டேன்.

டேய் ஏன்டா அந்த புள்ளைய தூக்குன. . . .

இல்ல சித்தி பாவம் தரையில் உட்க்கார்ந்து அழுதுகிட்டு இருந்துச்சு அதான் பாவம்னு தூக்குனேன். . . .

அது ******* வூட்டு புள்ளடா அவுங்கள தொட்டா தீட்டுடா . . . . .

தீட்டுன்னா . . . . . . ?

தீடுன்னா தீட்டு அதிகப் பிரசிங்கி மாதிரி கேள்வியெல்லாம் கேட்காதே. . . . .

அந்த புள்ளையோட அம்மா நம்ம வயல்ல தான வேல பார்க்குறாங்க அப்ப அவுங்க தொட்ட அரிசியும் தீட்டு தானே . . . . . ?

இப்படி பல கேள்விகளால் என் சித்தியை துளைத்தெடுக்கும் போது எனக்கு வயது 10.

அதற்கு பிறகு இது போன்ற எந்த ஒரு செயலையும் செய்ய வில்லை என்ற வருத்தமும் உள்ளது.

3. கவிதை எழுதனுமா கூப்புடுடா வெங்கட்ராமனை அப்புடீங்கற மாதிரி ஒரு நிலமையை என்னுடைய 11 12 வகுப்புகளில் ஏற்படுத்தியது.

இப்ப நம்ம கிட்ட இருந்த சரக்கு எங்க போச்சுன்னு தெரியல கவிதையா கிலோ எவ்வளவுங்கிற நிலமைக்கு வந்தாச்சு.

4. கல்லூரிகளில் படிக்கும் போது ஒரு நாள் கூட கட் அடிக்காமல் லீவும் போடாமல் 3 வருடங்களும் எல்லா நாளும் கல்லூரிக்கு போனது.

6. இன்று வரை புகை, மது அருந்தாதது (குடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் இல்ல, குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் இல்ல :)

7. வெறும் 20- 30 பதிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு வருடத்திற்கும் மேலாக வலைப் பதிவுகளில் ஒட்டிக்கொண்டிருப்பது.

8. பிளாஸ்டிக் பாலிதீன் போன்றவற்றினால் ஏற்படும் தீங்குகளை முழுவதுமாக உணர்ந்து அவற்றின் உபயோகத்தினை குறைத்துள்ளது.


நான் அழைக்கும் எட்டு பேர்

கார்த்திகேயன்

Bad News India

ஜெய்சங்கர்.நா

வடுவூர் குமார்

செல்வன்

செல்வேந்திரன்


இட்லிவடை


.:: MyFriend ::.

(இது இவுங்களுக்கு அரியர் எக்ஸாம் இந்த தடவயாவது கரெக்டா பதிவு போட்டு பாஸாகனும்)விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

37 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

Ithu Velinaaddu sathi! naan azhagaa 8 poddathu ethirkadchikku pidikkaamal vengkatai thoondi viddirukkaanggkaa. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

8 poddu license vaanggiddene naan?

super duperaa 8 poddathai paarthu University enna.. worldle neethaamma 1stuu rankuunnu periyavanggellaam (unggala maathiri) vanthu vaazthiddu poraanggga.. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

Naan podda 8-il kutramaa? edudaa antha keyboardai.. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

hehehe.. mele sonnathu ellam thamaashukkuthaan.. ippo officele irukken.. mella vanthu ungge 8 padichchuddu neengga paassaa failaannu solren.. ;-)

வெங்கட்ராமன் said...

ஆகா நானும் பயந்தே போயிட்டேன். என்னடா இது சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டமான்னு. பரவாயில்ல படிச்சு பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க .:: மை ஃபிரண்ட் ::.

.:: மை ஃபிரண்ட் ::. said...

ille ille ille.. ithai eththukkave mudiyaathu.. unggalukku 8 kooda poda theriayla..

.:: மை ஃபிரண்ட் ::. said...

8 eppadi podanumnnaa:

oru muddaiyai innoru muddai mele vaikkanum..

athuthaan 8

.:: மை ஃபிரண்ட் ::. said...

unggalukku 8 solren:8
solliyaachu! :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

neengga peyilu.. peyilu...

onnappuleye kanakku classle irunthun odiddanaale 8 poda theriyala unggalukku.. unggalukku kanmani teacher classle admission vaanggi tharadda? ;-)

வெங்கட்ராமன் said...

ஆகா கிளம்பிட்டாங்கய்யா. .. .
கிளம்பிட்டாங்க. . . .

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஆகா கிளம்பிட்டாங்கய்யா. .. .
கிளம்பிட்டாங்க. . . . //

ippothaan vanthirukken.. athukkulle kilamba sonnaa eppadi? :-P

வெங்கட்ராமன் said...

மக்களே .:: மை ஃபிரண்ட் ::. தனியா நின்னு கும்மி அடிக்கிறாங்க யாராவது வந்து அவுங்களுக்கு கம்பெனி குடுங்கப்பா . . . ?

வடுவூர் குமார் said...

என்னை கூப்பிட்டதற்கு மிக்க நன்றி.
முடிந்தால் போடுகிறேன்.என்ன விதிப்படி 8 பேரை கூப்பிடனும்!! அங்கு தான் நொண்டுகிறேன்.:-))

வெங்கட்ராமன் said...

என்ன குமார் சார் இப்படி சொல்லீட்டீங்க.
8 பேரை கூப்பிடுவது உங்களுக்கு கஷ்டமா என்ன. . . .
உங்கள் 8 பதிவை எதிர் பார்க்கிறேன் .

குசும்பன் said...

"கவிதை எழுதனுமா கூப்புடுடா வெங்கட்ராமனை .....அப்புடீங்கற மாதிரி ஒரு நிலமையை கவிதையா கிலோ எவ்வளவுங்கிற நிலமைக்கு வந்தாச்சு."

அப்பா எத்தனை பேர் பெரு மூச்சுவிடுறாங்க பாருங்க வெங்கட்ராமன்...
(நன்றி 8 போட்டதற்க்கு)

.:: மை ஃபிரண்ட் ::. said...

என்ன சதி நடக்குது இங்கண?

என் கும்மியை வெளியிட மறுத்த வெங்கட்டையும், என் கும்மியை ஏற்க்க மறுத்த ராஜப்பாட்டையும் வன்மையாக கண்டிக்கிறேண். :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

இருந்தாலும் விடுவோமா நாங்க.. வந்துட்டோம்ல. ;-)

ஸ்ட்டார்ட் மியூஜிக். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஒன்னாவது படிக்கும் போது 1 வது ரேங்க் வாங்கியது.//

எட்டாவது படிக்கும்போது எட்டாவது ரேங்கு..

அப்போ 100வது படிக்கும்போதுதான் செஞ்சுரி அடிப்பீங்கலா நீங்க தாத்தா? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இது உண்மையிலேயே சாதனை தான்.
//

இது விவேக் ஜோக் இல்லதானே?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கவிதை எழுதனுமா கூப்புடுடா வெங்கட்ராமனை அப்புடீங்கற மாதிரி ஒரு நிலமையை என்னுடைய 11 12 வகுப்புகளில் ஏற்படுத்தியது.//

இப்போ அந்த நிலை மாறி, அரசியல் எழுதணும்ன்னா கூப்பிடுடா வெங்கட்ராமனைன்னு மாறிடுச்சு.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கல்லூரிகளில் படிக்கும் போது ஒரு நாள் கூட கட் அடிக்காமல் லீவும் போடாமல் 3 வருடங்களும் எல்லா நாளும் கல்லூரிக்கு போனது.//

சுத்த வேஸ்ட்டுப்பா நீயி! :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இன்று வரை புகை, மது அருந்தாதது (குடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் இல்ல, குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் இல்ல//

கூட் கூட்.. குடிகார குப்பா, வெங்கட்ராமனை பார்த்தாவது திருந்து! சரியா? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//வெறும் 20- 30 பதிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு வருடத்திற்கும் மேலாக வலைப் பதிவுகளில் ஒட்டிக்கொண்டிருப்பது.//

நீங்க என்ன ப்ராண்டு க்லூ பயன்படுத்துறீண்க்க? நல்லா ஒட்டிக்கிட்டீங்களே! :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பிளாஸ்டிக் பாலிதீன் போன்றவற்றினால் ஏற்படும் தீங்குகளை முழுவதுமாக உணர்ந்து அவற்றின் உபயோகத்தினை குறைத்துள்ளது.
//

நெஜமாலுமா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//.:: MyFriend ::.

(இது இவுங்களுக்கு அரியர் எக்ஸாம் இந்த தடவயாவது கரெக்டா பதிவு போட்டு பாஸாகனும்)//

பாருங்கப்பா பாருங்கப்பா... எல்லாரும் என்னோட எட்டை வந்து பாருங்க... நீங்களே சொல்லுங்க.. வெங்கட் அழகா எட்டு போட்டிருக்காரா? இல்ல நான் அழகா எட்டு போட்டிருக்கேனான்னு! :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

குவாட்டர் போட்டுட்டேன் போலிருக்கே! ஆனா, அது உங்களுக்கு பயன்படாது!

பின்னால குடிகார குப்பன் வருவான்.. அவனுக்கு கொடுத்திடுங்க.. சரியா? :-P

வெங்கட்ராமன் said...

வாங்க
இப்படி நீங்க கும்மி அடிக்க வருவீங்கன்னு தெரியாம போச்சே . . . .

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

பின்னூட்டங்களுக்கு வெள்ளி விழா கொண்டாட வேண்டியது தான்

சிநேகிதன்.. said...

தாங்ஸ் தலைவா..அடிக்கடி கண்டுக்கோங்க..!!

வெங்கட்ராமன் said...

நன்றி சிநேகிதன்

நம்ம பதிவு எப்படீன்னு சொல்லவே இல்லையே. . . . . .

சிநேகிதன்.. said...

\\1 2 3 . . . . . . . . . எப்படியாவது படிச்சு கிளாஸ்லயே பெரிய ரேங்க் வாங்கனும் என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டேன்.)\\
ரீப்பிட்டே!!!
இப்படிக்கு,
32 வது ரேங்க் வாங்கிய சாதனையாளன்( class total strength 32)

ஜீவி said...

இந்தப் பதிவு விதியை மீறிய விளையாட்டு என்றாலும் சொல்ல
நினைத்தைச் சொல்கிறேன்:
கல்மிஷமில்லாம, நினைத்ததை எழுதற, பாராட்டற, தவறென்னறு
உணரின் தன்னைத் திருத்திக்கற மனசு இருக்கிறது உங்களுக்கு... உண்மையான கலைஞனுக்கு அதான் முதல்
தேவை..
வாழ்த்துக்கள்..
ஜீவி

.:: மை ஃபிரண்ட் ::. said...

//வாங்க
இப்படி நீங்க கும்மி அடிக்க வருவீங்கன்னு தெரியாம போச்சே . . .//

நான் வரும்போது உங்களுக்கு அப்படி என்ன தூக்கம் வேண்டி கெடக்கு? நான் ஒத்த ஆளாவே கும்மியடிக்க வேண்டியதா போச்சு! வீக்டேய்ஸ்ல வீக்கெண்ட்ல அடிக்கிற மாதிரி முடியல.. அதான் கொஞ்சமே கொஞ்சமா அடிக்கிறேன். ;-)

//உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.//

வணக்கம் தமிழகம். :-P

//பின்னூட்டங்களுக்கு வெள்ளி விழா கொண்டாட வேண்டியது தான் //

வெள்ளி விழாவா? தங்க விழாவே கொண்டாடிடலாமே! ;-)

வெங்கட்ராமன் said...

ஜீவி ரொம்ப நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு.
(இந்த பின்னூட்டம் எனக்கு தானே)

வெங்கட்ராமன் said...

//////////////////////////////
ஒத்த ஆளாவே கும்மியடிக்க வேண்டியதா போச்சு! வீக்டேய்ஸ்ல வீக்கெண்ட்ல அடிக்கிற மாதிரி முடியல.. அதான் கொஞ்சமே கொஞ்சமா அடிக்கிறேன். ;-)
//////////////////////////////

கூடி கும்மி அடிப்போர் சங்கம்ன்னு ஒன்னு ஆரம்பிச்சுடலாம் போலிருக்கே. . . . . .

வெங்கட்ராமன் said...

//////////////////////////////
வெள்ளி விழாவா? தங்க விழாவே கொண்டாடிடலாமே! ;-)
//////////////////////////////

உங்கள மாதிரி நாலு நல்லவங்க(?) ஆதரவு இருந்தா கண்டிப்பா கொண்டாடிலாம்.

BadNewsIndia said...

எட்டில் சிறந்தது இதுதான் :)

--பிளாஸ்டிக் பாலிதீன் போன்றவற்றினால் ஏற்படும் தீங்குகளை முழுவதுமாக உணர்ந்து அவற்றின் உபயோகத்தினை குறைத்துள்ளது.
--

வெங்கட்ராமன் said...

நன்றி BadNewsIndia
பிளாஸ்டிக் பாலிதீன் போன்றவற்றின் தீமைகளை உணர்ந்தும் பலர் இந்த விஷயத்தில் அலட்சியமாய் இருப்பது வேதனையை தருகிறது.

உங்கள் எட்டு பதிவை எதிர்பார்க்கிறேன்.