Wednesday, August 08, 2007

இந்த கருமங்கள தானா தினமும் படிக்கிறீங்க. . . .? [#32]

நண்பர் வீட்டுக்கு வார இறுதியை கழிக்க சென்றிருந்தேன். வழக்கம் போல பேச்சு, அரட்டை, சமையல் என்று சனிக்கிழமை ஒரு வழியாக கழிந்தது. முதல் நாள் தி.நகர் வர்தமான் பதிப்பகத்தில் வாங்கியிருந்த பார்த்திபன் கனவு ஞாபகம் வரவே . . . .

"டேய் பழைய நியூஸ் பேப்பர் எல்லாம் எங்கடா இருக்கு..." என்று நண்பரை வினவ வீட்டு ஹாலில் இருந்த அலமாரியை காட்டினார். . .

வசமாக அமர்ந்து கொண்டு, பேப்பரை எடுத்து புத்தகத்தில் வைத்து மடித்தேன். .. .

கள்ளக் காதலியின் கனவனை கொன்ற. . . .. என்று முன் அட்டைக்கு மேலே வர சீ இது வேண்டாம் என்று வேறு பேப்பரை துலவி எடுத்தேன்.

பிரசாந்த் மனைவி கிரக்கலெட்சுமியிடம் அவரது இரண்டு கனவர்களும். . . . . என்று செய்தியுடன் அந்த பெண்ணின் புகைப் படமும் வர அடுத்த பேப்பரை எடுத்தேன்.

அட தலைவர் சிவாஜி ஸ்டில்லு, சூப்பரு என்று முன் அட்டையில் ரஜினி படத்தை வைத்து மடிக்க, பின் அட்டையை ஏதோ ஒரு நாயகியின் தொப்புள் பிரதேசம் மட்டும் ஆக்கிரமித்திருந்தது, இதென்ன ஆனந்த விகடனா, தொப்புள மட்டும் தனியா ஒரு பக்கத்துல போடுறதுக்கு என்று மீண்டும் வேறு பேப்பரை துளவினேன்.


தொழில் அதிபர்களின் பட்டியலை வெளியிடுவேன், நடிகை எச்சரிக்கை . . . .

வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் போலீசில் தஞ்சம். . . . .. .

கனவர் சந்தேகப் பட்டதால் பெண் தீக்குளித்து தற்கொலை. . . . . .

நடிகையை நாய் கடித்தது. . . . . .

.
.
.
.
.
.

என்று அலமாரியில் இருந்த பேப்பர் எல்லம் ஹாலுக்கு வந்தது. . . . .

"டேய் என்னடா பண்ணிகிட்ருக்க. . . ." என்று நண்பர் அழைக்க திரும்பிப் பார்த்தேன்.


இல்லடா பஸ்ல போரப்ப படிக்கலாமேன்னு தான் அட்டை போட முயற்சி பண்ணேன். எதுக்கு நாமளும் பார்த்திபன் கனவு படிக்கிறோம்னு விளம்பரம், அதான் அட்டை என்று இழுத்தேன். . .

"அதுக்கு ஏண்டா இப்படி எல்லா பேப்பரையும் கலைச்சு போட்றுக்க. . . . ."

ஒரு நல்ல சேதி இருக்குற பேப்பர பார்த்து போடலாம்னு தான் தேடிக்கிட்டு இருக்கேன். . .

ஏண்டா இந்த கருமங்கள தானா தினமும் படிக்கிறீங்க. . . . .?


என்று நான் என்ன கேட்க, எல்லாமே இப்படி தான் இருக்கு நான் என்ன பண்ண நாட்ல நடக்குறத தெரிஞ்சுக்க வேண்டாமா. . . . .? என்று கேட்டான்.

அவனை அழைத்துச் சென்று, அவன் கனினியில் தமிழ்மணம் பக்கத்தை திறந்து புக் மார்க் செய்து, தினமும் இதை படி என்று சொல்லிவிட்டு கலைந்திருந்த பேப்பர்களை அடுக்கி வைக்க ஹாலுக்கு சென்றேன். . . .

25 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

WOW. SUPER VENKAT.. SURUKKAMAA SONNAALUM NACHCHUNU SOLLIYIRUKKEENGGA. :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

sorry,.. velai senjudde ungge post padichu comment opda, athu capital letterle vanthuduchu. :-(

குசும்பன் said...

காருக்குள் இருந்த அழகிகள் கைது.

கணவணின் "நறுக்" வெட்டிய மனைவி...

14 வயது மாணவி ஆசிரியரால் கர்பம்...


இப்படி இன்னும் பல தலைப்பு செய்திகள் இருக்கே:(

விஜயன் said...

வேற வழி. எல்லாருக்கும் இது சாத்தியமா என்ன????

கோபிநாத் said...

சூப்பர் வெங்கட் ;-)

வெங்கட்ராமன் said...

நன்றி .:: ஃமை பிரண்ட் ::.

அதென்ன உங்க பேர பேராலஜி யால மாத்தி வச்சிகிட்டீங்களா. . . .
.:: மை நுபிரண்ட் ::. ன்னு . . .. . .?

வெங்கட்ராமன் said...

குசும்பன் இன்னும் பல சேதிகள் இருக்கு.
எதுக்கு பப்ளிக்கா போட வேணாமேன்னு தான் சிலத மட்டும் போட்டேன் . . . .

நன்றி குசும்பன்.

வெங்கட்ராமன் said...

*****************************
வேற வழி. எல்லாருக்கும் இது சாத்தியமா என்ன????
*****************************

வாஸ்தவம் தான், நம்மைப் போன்றவர்களாவது இந்த பத்திரிக்கைகளையும் கண்றாவிகளையும் படிப்பதை நிறுத்தினால் நல்லது.

நன்றி விஜயன்.

வெங்கட்ராமன் said...

நன்றி கோபிநாத்.

நந்தா said...

இதுக்குப் பேசாம செருப்பு கழட்டி அடிச்ச்சிருந்திருக்கலாம்....

சூப்பர் பதிவு....

Anonymous said...

தமிழ்மனம் பககத்தை
அவ்வளவும் நல்லதா?
பத்திரிக்கை அளவுக்கு இல்லை என்பது மட்டும் உண்மை.

லொடுக்கு said...

நான் வலைப்பதிவுகள் வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து நாளிதழ்கள் படிப்பதையே நிறுத்திவிட்டேன்.

நீங்கள் அழகாக குத்திக்காட்டியுள்ளீர்கள். நன்றி.

வெங்கட்ராமன் said...

பத்திரிக்கைகள நாம ஒன்னும் பண்ணமுடியாது நந்தா. . . . .

நாமதான் படிக்கிறத நிறுத்தனும்.

தங்கள் கருத்துக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

வெங்கட்ராமன் said...

***********************************
அவ்வளவும் நல்லதா?
பத்திரிக்கை அளவுக்கு இல்லை என்பது மட்டும் உண்மை.
***********************************

பதிவர்களுடைய படைப்புகள் தானே தமிழ்மனத்தில் வருது. பதிவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளும் போது தமிழ்மனம் இன்னும் பொலிவு பெறும்.

வெங்கட்ராமன் said...

************************************
நான் வலைப்பதிவுகள் வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து நாளிதழ்கள் படிப்பதையே நிறுத்திவிட்டேன்.
************************************

அடியேனும் அப்படியே. . . .

நன்றி லொடுக்கு . . . .

நிலவு நண்பன் said...

சுடச்சுடச் செய்திகள்ன்னு சொல்றாங்களே இதுதானோ..?

என் நண்பன் ஒருவன் இதுபோன்ற செய்திகளை மட்டும் அதிகமாய் விளம்பரப்படுத்தும் இப்பத்திரிக்கைகளுக்கு மஞ்சள் பத்திரிக்கை என்று பெயர் வைத்திருக்கின்றான்

வெங்கட்ராமன் said...

வாங்க நிலவு நண்பன்.

******************
இப்பத்திரிக்கைகளுக்கு மஞ்சள் பத்திரிக்கை என்று பெயர் வைத்திருக்கின்றான்
******************

உங்க நண்பர் சொல்வது சரிதான்.

தங்கள் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் நன்றி.

வெங்கட்ராமன் said...

வடுவூர் குமார் சார்,
பிழையை திருத்திவிட்டேன்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

பதிவைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே. . . .?

துளசி கோபால் said...

பதிவு சூப்பர்.

ஆமாம், அப்ப பார்த்திபன் கனவுக்கு அட்டை?

பேசாம புத்தகத்தோட ஜாக்கெட்டை(???!!!!)எடுத்துறலாம்:-)))))

வெங்கட்ராமன் said...

நன்றி துளசி கோபால்.

தேடிப் பிடித்து கன்னியாகுமரி வள்ளுவர் சிலை உள்ள ஒரு பக்கத்தை அட்டையாகப் போட்டேன். . .:-)

சுல்தான் said...

சும்மா இருந்த உங்க நண்பர், தமிழ் வலைப்பதிவு அடிக்ட் ஆகி ......
பாவம்.....:-)))))))

வெங்கட்ராமன் said...

வாங்க சுல்தான், பின்னூட்டத்திற்கு நன்றி

**************************
சும்மா இருந்த உங்க நண்பர், தமிழ் வலைப்பதிவு அடிக்ட் ஆகி ......
பாவம்.....:-)))))))
**************************

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

விக்னேஷ்வரன் அடைக்கலம் said...

pathirikaigal intha mathiriyana thagavalkalai thavirthu. payanulla thagavalkalai poddal pirarukku nanmaiyaga irukum.

வெங்கட்ராமன் said...

பின்னூட்டத்திற்கு நன்றி விக்னேஷ்.

எல்லாமே வியாபாரமாகிப் போச்சு.
என்னத்த சொல்ல. . . . .

Anonymous said...

Your blog keeps getting better and better! Your older articles are not as good as newer ones you have a lot more creativity and originality now keep it up!