பேருந்தில் ஏறி நடத்துனரிடம் 2 ரூ கொடுத்து தி.நகர் என்று சொல்லி டிக்கெட் கேட்டேன், 3 ரூபாய் என்று சொன்னார். ஏன் தி.நகர் இங்கிருந்து 2 ஸ்டாப் தானே எதற்கு 3 ரூபாய் என்று கேட்டேன் M சர்வீஸ் என்று பதில் சொன்னார்.
பல முறை இதே போல் நடக்க, ஒரு நடத்துனரிடம் இதைப் பற்றி தெரிந்து கொள்ள கேட்டேன்.
வெள்ள போடுன்னா 2 ரூபாய், ஸ்டாப் அதிகமா இருக்கும்
மஞ்சள் போடுன்னா 2 ரூபாய் 50 காசு, ஸ்டாப் கம்மியா இருக்கும்
அதென்ன M சர்வீஸ் . . . ? என்று கேட்டேன்.

தம்பி M சர்வீஸ் னா, ஸ்டாப்பும் ஜாஸ்தியா இருக்கும் காசு ஜாஸ்தியா இருக்கும் மினிமமே 3 ரூபாய் தான் என்று சொன்னார்.
என்னங்க புரியலயே என்று கேட்டேன்.
நான் என்னப்பா பண்றது அவங்க சொல்ற மாதிரி தானே நான் டிக்கேட் போடமுடியும் என்று பதில் சொன்னார்.
அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஆனால் இப்போது M சர்வீஸ் அதிகமாகிவிட்டன, எல்லா வழித்தடங்களிலும் M சர்வீஸ் இயங்கி வருகின்றன. சாதாரன பேருந்துகள் இப்போது M சர்வீஸ் ஆகா மாற்றப் படுகின்றனவோ என்று சந்தேகம் வருகிறது.
பேருந்து கட்டணத்தை வெளிப்படையாக உயர்த்தாமல், இப்படி பாதி வழித்தடங்களை M சர்வீசாக மாற்றுவதன் மூலம் இந்த கட்டண உயர்வை செய்து விட நினைக்கிறார்களோ என்று நினைக்கிறேன். நன்றாக கவனிக்கவும் நினைக்கிறேன் இது என் சந்தேகமும் யூகமும் தானே தவிர வேறு எதுவும் இல்லை.
போக்கு வரத்து துறையை சார்ந்தவர்கள் யாரேனும் இருந்தால், சரியான் விளக்கம் தரலாமே. . . . . .
Image Courtesy
http://frank.itlab.us/worldtrip_2002/transport_bus.jpg


