Tuesday, August 05, 2008

நித்யா, எனக்கு பயமா இருக்கு

நித்யா, எனக்கு பயமா இருக்கு

ஏன். . .

இல்ல, அந்த பொண்ணு என்ன புடிக்கலன்னு சொல்லிட்டா. . .

அந்தப் பொண்ணுக்கு உன்ன தெரியுமா?

தெரியும்னு தான் நினைக்கிறேன்.

அப்புறம் என்ன, உனக்கு என்ன குறைச்சல், அப்படி அவ புடிக்கலைன்னு சொல்லிட்டா, அவ அதிர்ஷ்டம் அவ்வளவுதான். நாம என்ன பண்ண முடியும்?

என் அதிர்ஷ்டமும் அவ்வளவுதான்.

சீ, தைரியமா போய் உன் லவ்வ சொல்லு. உன்ன புடிக்காதுன்னு எந்த பொண்ணாவது சொல்லுவாளா?

ஆமா என்ன எல்லா பொண்ணுங்களுக்கும் புடிக்கும். ரொம்ம ஓட்டாதா, நானே டென்ஷன்ல இருக்கேன்.

நிஜமா தான் சொல்றேன்.

பொய் சொல்லாத. இப்ப நான் உன்ன லவ் பண்றன்னு சொன்னா உடனே ஒத்துக்குவியா? சொல்லு?

(விஜய் கடைசியாக கேட்டதை மட்டும் சொல்லி இருந்தால் கண்டிப்பாக சந்தோஷப்பட்டிருப்பாள். ஆனால் நேற்று இதே நேரம் தான் விஜய் தான் ஒரு பெண்ணை

காதலிப்பதாகவும் அவளிடம் சீக்கிரம் விஷயத்தை சொல்ல வேண்டும் என்றும் சொன்னான். விஜய் தனக்கு தெரியாமல் எதையும் செய்ய மாட்டான் என்று நினைத்தவளுக்கு

இது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. விஜய் மீதான தன் காதல் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று அவள் நினைக்கவில்லை.)

பாத்தியா, அமைதியா இருக்க. மூனு வருஷமா ஒன்னா வேல பாக்குறோம், நீயே யோசிக்கிற அப்புறம் அந்த பொண்ணு எப்படி ஒத்துக்கும். சொல்லு புடிக்கலன்னாவது சொல்லு.

இல்ல எனக்கு புடிச்சிருக்குன்னு தான் சொல்லுவேன்.

நிஜமா?

ம்ம்...., அந்த பொண்ணு கிட்ட பேசிட்டு, என்ன சொன்னான்னு அப்பறமா சொல்லு. என்று சொல்லிவிட்டு இருந்து வேகமாக எழுந்தாள்.

ஏய், என்ன அவசரம் உட்காரு. அந்த் பொண்ணு என்ன சொன்னானு சொல்றேன். அந்த பொண்ணு என்ன புடிச்சிருக்குன்னு சொன்னா.

எப்ப சொன்னா...

இப்பதான் சொன்னா, என்று குறும்பாக அவளைப் பார்த்து சிரித்தான்.

அவள் இதழ்களில் புன்னகை வருவதற்கு முன், கண்களில் கண்ணீர் எட்டிப் பார்தத்து.

17 comments:

VIKNESHWARAN said...

அழகான கதை... சுவாரசியமாக இருக்கிறது நண்பரே... காதலில் விழுந்துவிட்டீர்களா?

Mouli said...

அனுபவிச்சு எழுதியிருக்கீரய்யா! :)

சதங்கா (Sathanga) said...

மூனு வருஷம் பழகினாலும், இந்த விசயத்தை சொல்றது தயக்கம் தான் இல்லையா. சிம்பிளா நச்சுனு சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

வெங்கட்ராமன் said...


VIKNESHWARAN said...
அழகான கதை... சுவாரசியமாக இருக்கிறது நண்பரே... காதலில் விழுந்துவிட்டீர்களா?


விக்னேஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

வெங்கட்ராமன் said...

மெளலி அனுபவமெல்லாம் இல்லை.
கற்பனைதான்.

வெங்கட்ராமன் said...

நன்றி சதங்கா

Thamizhmaangani said...

கதை ரொம்ப அழகா இருக்கு!! ரசித்து படித்தேன். வாழ்த்துகள்!:)

உருப்புடாதது said...

கலக்கிட்டீங்க....

காதல சொல்ல ஒரு நல்ல ஐடியா சொல்லி இருக்கீங்க
மிக்க நன்றி

வெங்கட்ராமன் said...

நன்றி தமிழ்மாங்கனி

வெங்கட்ராமன் said...

காதல சொல்ல ஒரு நல்ல ஐடியா சொல்லி இருக்கீங்க
மிக்க நன்றி


உபோகிச்சு பார்த்து சொல்லுங்க உருப்படாதது. . .

Prabakar Samiyappan said...

பல காதல் என்று சொல்லாமலே முடிந்துவிடுகிறது ஹி ஹி ஹி

அருமையான உண்மையான சிறு கதை வாழ்த்துக்கள் ..

வெங்கட்ராமன் said...

வாங்க பிரபாகர் சாமியப்பன்.
இது உண்மை எல்லாம் இல்லீங்க. . .

கபீஷ் said...

கதை ரொம்ப நல்லாருக்கு (நானும் இது கதைன்னு நம்பிட்டேன் :-))

இந்த மாசம் எதுவும் எழுதலயா?

நாமக்கல் சிபி said...

எனிவே வாழ்த்துக்கள்! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!

டிரீட் எப்போ?
(இப்பவே கொடுத்தாலும் சரி! தம்பதிகளாய் சேர்ந்து கொடுத்தாலும் சரி)

வெங்கட்ராமன் said...

வாங்க கபீஷ்.
அட இது கற்பனை கதை தாங்க. . .

(நீங்க இத உண்மைன்னு நம்புற மாதிரியா எழுதி இருக்கேன்?)

வெங்கட்ராமன் said...

வாங்க நாமக்கல் சிபி.

ட்ரீட்டா?
உண்மைலயே இப்படி ஒன்னு நடந்தா கொடுத்திடலாம்.

Cable Sankar said...

நைஸ்.. நல்லாயிருக்கு நண்பரே..