சென்னை மெரினா பீச் எங்கும்
ஆதாம் - ஏவாள்கள்
ஆதாம் - ஏவாள்கள்
.
நம் கேமரா சுழல ஆரம்பிக்கிறது.
மாலை 6.30
இருவர் இருவராய் வருகிறார்கள்.
மாலை 7.30
ஒருவர் ஒருவராய் இருக்கிறார்கள்.
ஒரு சிற்றின்பப் பூங்காவாய்
மெரினா !
அதோ, கேமரா கூர்கிறது
அந்த ஹார்பர் பகுதியின் பழைய கூவத்தை தடுத்து நிற்கும்
இரும்பு மதகுகள்
மீசை வளராத ஒரு பையனும்
.... வளராத ஒரு பெண்ணும்
அங்கே போகிறார்கள்.
போய் என்ன ?
இன்னொரு தாஜ்மஹாலுக்கா
அஸ்திவாரம் தோண்டப் போகிறார்கள்?
சில லுங்கி மனிதர்களுக்கு
அதை வேடிக்கை பார்ப்பது
வாடிக்கை.
.
கேமராவைத் திருப்பினால்
அதோ, ஒரு கட்டுமரம் !
மீனவர்களின் கர்ப்பக்கிரகம் !
கர்ப்பக்கிரகத்தில் கிடக்கிறது
கர்ப்பத் தடை மாத்திரைகள் !
அதோ, லைட் ஹவுஸ்
ஆதாம் - ஏவாள்களுக்கு
லைட் ஹவுஸ் பிடிக்காது
இருட்டு இருட்டாய் இருக்கும்
கெஸ்ட் ஹவுஸ் பிடிக்கும் ?
அவர்களுக்கு
ஒளி ஒளியாய் இருக்கும்
லைட் ஹவுஸ் பிடிக்குமா ?
இதோ, இங்கே அண்ணா சமாதி
எம்.ஜி.ஆர் சமாதி
எதையும் தாங்கும் இதயங்கள்
இதையும் தாங்குகின்றன.
சுற்றுலா பயணிகள் நனைகிறார்கள்.
சுற்றுலா வரும் பெண்கள் கவனிக்க:
(முழங்கால் வரை புடவை தூக்கி
கடலில் இறங்காதீர்கள்.
பலபேர் கண்களோடு பிறப்பதே
இதற்காகத்தான்.)
.
அதோ ! நம் கேமரா
சுண்டல்காரப் பையனிடம்
பேட்டி எடுக்கிறது.
"கட்டுமரத்தாண்ட என்ன பார்த்தே ?"
சிரிக்கிறான்.
"அங்கே ஓர் அண்ணன்
குழந்தையாயிட்டாரு !"
காற்று வாங்குவதற்காக
கடற்கரை பக்கம் வந்த
ஷாஜகான் - மும்தாஜ் ஆவிகள்
இவற்றைப் பார்த்துக் கடலில் விழுந்து
இரண்டாம் முறை இறந்ததாகக் கேள்வி !
மாநகராட்சி சோடியம்
விளக்குகளால்
மாநாடே போட்டிருக்கிறது !
ஆதாம் - ஏவாள் எதற்கும்
கலங்குவதில்லை
அவசர ம்கசூல்தான்
அவர்களுக்கு முக்கியம்.
அலைகள் விளையாடி
ஆனந்தம் நிறைந்த
மெரினா கடற்கரையா ?
காம விளையாட்டுச்
சிற்பங்கள் நிறைந்த
கஜுராஹோ கோயிலா ?
' காதாலாகி... கசிந்துருகி...
கண்ணீர் மல்கி'
என்று எழுதியவன்
எழுதிய விரல்களை
வெட்டிக் கொள்வான்.
.
அதோ நம் கேமராவை
ஜீம் செய்கிறோம் !
ஒரு இரண்டு சக்கர
வாகன மறைவு
பள்ளிக்கூடச் சீருடைதான்
அவர்களுக்கு
ஒரு பெற்றோரின் கனவு
மாளிகைக்கு
மனித வெடிகுண்டாய்
மாறிக் கொண்டிருக்கிறார்கள் !
அவனும் - அவளம்.
எங்கே போகிறது இந்தியா ?
இந்தியர்கள்
அமெரிக்காவுக்கு போகலாம்.
இந்தியக் கலாச்சாரம்
அமெரிக்காவுக்குத் தாவுகிறதா ?
.
அதோ !
ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பகுதி
ஆதாம் அவளை
'தேவதை' என்கிறான்
ஏவாள் அவனை
'தேவன்' என்கிறாள்
கடைசியில் இருவருமே சாத்தான்கள் !
பாரதி இதைப் பார்த்திருந்தால்
தலைப்பாகையை கழற்றிவிட்டு
தண்டவாளத்தில் படுத்திருப்பான் !
கோவா கடற்கரை
அலைகளில் இருக்கும் கேவலம்
மெரினா கடற்கரை
அலைகளிலும் கலக்கிறதா ?
காதலர் என்ற் பெயரில்
இந்த சதைப் பிராணிகள் சிலது
தற்கொலை செய்து கொள்கின்றன.
மரணம் இவர்களால்
அசிங்கப்பட்டுப் போகிறது.
நம் கேமராவையே நம்மால்
நம்பமுடியவில்லை.
இரண்டு ஆதாம் ஓர் ஏவாள்
ஓர் ஆதாம் இரண்டு ஏவாள்
ஒன்று தெரியுமா ?
கவிஞர்கள் யாருமே இப்போது
கடற்கரைக்குப் போய்
கவிதை எழுதுவதில்லை.
கடற்கரைக்குப் போனால்
கவிதை எங்கே வருகிறது ?
காமம் தான் வருகிறது.
ஆப்பிள் கடித்தால்
அந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும்
மானமும், நாணமும் வந்ததாம் !
அந்த ஆப்பிள் எங்கே கிடைக்கும்
ஒரு லாரி ஆப்பிள்
அனுப்ப முடியுமா ?
இங்கே மானமும் நாணமும்
நிறைய வேண்டியிருக்கிறது !
இவ்வளவு நேரம்
இந்த நீல இனங்களை
'ஆதாம் ஏவாள்'
என்ற பெயர்களால் குறித்தேன்.
அந்த ஆதாம் - ஏவாள்
என்னை மன்னிப்பார்களா?
-------------------------------------------
புத்தகம் : வானவில் பூங்கா (குமரன் பதிப்பகம்)
ஆசிரியர் : பா.விஜய்
Monday, September 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//பாரதி இதைப் பார்த்திருந்தால்
தலைப்பாகையை கழற்றிவிட்டு
தண்டவாளத்தில் படுத்திருப்பான்///
intha khatalai parpathaivide saathal saathal saathal ena elluthi vaithirupar... :-(
மிக்க நன்றி.
நன்றாக உள்ளது.
ஆதங்கமா? கோபமா? விரக்த்தியா?
இல்லை எல்லாம் சேர்ந்ததா?
வணக்கம் வெங்கட் சார்... தங்களின் சமூக அக்கறையை பாரட்டுகிறேன், அதைவிட மெரினா பற்றி கவிதை எழுதிய கலைமாமணி,, வித்தககவிஞர், வாலி வாரிசு,வைரமுத்து நகல், இன்னும் எல்லா கருமாந்திரப்பட்டத்துக்கும் சொந்தக்காரராகிய பா.விஜய் வேண்டுமானால் மெரினாவுக்கு போய் காதல் பண்ணவேண்டாம்,அதற்கான சூழலும் அவருக்கு அமையவில்லை, ஆனால் அதற்காக வேறு வழியில்லாமல் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் எதோ சில இச்சைகளை தீர்த்துகொள்ளும் அவர்களை இப்படி தீண்டதாகாதவர்கள் மாதிரி எழுதியிருக்கிறாரே சனி கிழமை ஆனால் டிஸ்கொத்தே போய் கலாச்சாரத்தை சீரழிக்கும் அவருக்கு பாடல்கள் வாய்ப்பு தரும் கோஷ்டிகளை பற்றி கொஞ்சம் எழுத சொல்லுங்கள்,,, பணம் இருப்பதால் இந்த கோஷ்டிகள் ஸ்டார் ஓட்டல்களில் ஒப்பேத்திவிடுகிறார்கள்....அவர் சார்ந்திருக்கும் அரசியல்வாதிகளின் வண்டவாளத்தை கொஞ்சம் எழுதலாமே? தலைவர் பெயருக்கு அவப்பெயர் வாங்கி கொடுக்கும் கோஷ்டிகளை கிழிக்கலாமே? மிடில் கிளாஸ் வாழ்க்கை தலைவா வேறவழியில்லை...எவ்வளவோ வாழ்வை பதிவு செய்ய வேண்டிய வேலையை விட்டிடு பாவம் இடம் இல்லாதவர்களை ஏன் காயப்படுத்தனும்....நீங்க ஏன் அதுக்கு துணைபோகனும்,,,,அன்புடன் வீரமணி
kavithai romba katthu kutti thanamaa irukku!
வாங்க விக்னேஷ்.
பின்னூட்டத்திற்கு நன்றி.
ஆதங்கமா? கோபமா? விரக்த்தியா?
இல்லை எல்லாம் சேர்ந்ததா?
எனக்கென்னமோ எல்லாம் சேர்ந்த மாதிரிதான் தோன்றுகிறது
தங்கள் வருகைக்கு நன்றி
வாங்க வீரமணி சார்.
முதல் முறையா நம்ம வலைப்பக்கத்திற்கு வந்திருக்கீங்க.
பா.விஜய் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்களை 100% ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால்
பாவம் இடம் இல்லாதவர்களை ஏன் காயப்படுத்தனும்....
வீடு வாசல் இல்லாமல் பிளாட்பாரத்தில் குடி இருப்பவர்கள் கூட கன்னியமாக இருக்கிறார்கள் கனவன் மனைவியாக.
அங்கு வருபவர்கள் இடம் இல்லாதவர்கள் என்று சொல்ல முடியாது. பல்சரிலும், கார்களிலும் வருபவர்களை இடம் இல்லாதவர்கள் என்று எப்படி சொல்வீர்கள் ?
அவர்கள் தங்கள் இச்சைகளை தீர்த்துக் கொள்வதைப் பற்றியும் நான் சொல்ல வில்லை, தினம் பல்லாயிரம் பேர் வந்து செல்கின்ற இடத்தில் இப்படி நடந்து கொள்வது தான் தவறென்று சொல்கிறேன்.
வாங்க பிரதீப்.
நீங்க சொல்றது சரின்னு தான் தோனுது.
தங்கள் வருகைக்கு நன்றி.
இங்க போடவேண்டிய பின்னூட்டம் எதுக்கு போச்சுன்னே தெரியவில்லை,
நல்ல கவிதை!!! நீங்க இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவில்லை போல!!!
நான் வீரமணி சொன்ன கருத்தோடு முழுமையா ஒத்து போகிறேன்!!!
வாங்க குசும்பன்.
வீரமனி சொல்லும் முதற்பாதி விஷயங்கள் மிக்கச்சரி.
இடம் இல்லாதவர்கள் அங்கு வந்து சந்தோஷமாக இருக்கிறார்களாம். பல்சர் ல் வரும் அவர்களுக்கு இடம் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா. . . ?
Post a Comment