Monday, September 10, 2007

சென்னை மெரினா கடற்கரை - பா.விஜய் கவிதை

சென்னை மெரினா பீச் எங்கும்
ஆதாம் - ஏவாள்கள்
ஆதாம் - ஏவாள்கள்

.

நம் கேமரா சுழல ஆரம்பிக்கிறது.
மாலை 6.30
இருவர் இருவராய் வருகிறார்கள்.
மாலை 7.30
ஒருவர் ஒருவராய் இருக்கிறார்கள்.

ஒரு சிற்றின்பப் பூங்காவாய்
மெரினா !

அதோ, கேமரா கூர்கிறது
அந்த ஹார்பர் பகுதியின் பழைய கூவத்தை தடுத்து நிற்கும்
இரும்பு மதகுகள்

மீசை வளராத ஒரு பையனும்
.... வளராத ஒரு பெண்ணும்
அங்கே போகிறார்கள்.

போய் என்ன ?
இன்னொரு தாஜ்மஹாலுக்கா
அஸ்திவாரம் தோண்டப் போகிறார்கள்?

சில லுங்கி மனிதர்களுக்கு
அதை வேடிக்கை பார்ப்பது
வாடிக்கை.
.

கேமராவைத் திருப்பினால்
அதோ, ஒரு கட்டுமரம் !
மீனவர்களின் கர்ப்பக்கிரகம் !
கர்ப்பக்கிரகத்தில் கிடக்கிறது
கர்ப்பத் தடை மாத்திரைகள் !

அதோ, லைட் ஹவுஸ்
ஆதாம் - ஏவாள்களுக்கு
லைட் ஹவுஸ் பிடிக்காது
இருட்டு இருட்டாய் இருக்கும்
கெஸ்ட் ஹவுஸ் பிடிக்கும் ?
அவர்களுக்கு
ஒளி ஒளியாய் இருக்கும்
லைட் ஹவுஸ் பிடிக்குமா ?

இதோ, இங்கே அண்ணா சமாதி
எம்.ஜி.ஆர் சமாதி
எதையும் தாங்கும் இதயங்கள்
இதையும் தாங்குகின்றன.

சுற்றுலா பயணிகள் நனைகிறார்கள்.
சுற்றுலா வரும் பெண்கள் கவனிக்க:
(முழங்கால் வரை புடவை தூக்கி
கடலில் இறங்காதீர்கள்.
பலபேர் கண்களோடு பிறப்பதே
இதற்காகத்தான்.)
.
அதோ ! நம் கேமரா
சுண்டல்காரப் பையனிடம்
பேட்டி எடுக்கிறது.

"கட்டுமரத்தாண்ட என்ன பார்த்தே ?"
சிரிக்கிறான்.
"அங்கே ஓர் அண்ணன்
குழந்தையாயிட்டாரு !"

காற்று வாங்குவதற்காக
கடற்கரை பக்கம் வந்த
ஷாஜகான் - மும்தாஜ் ஆவிகள்
இவற்றைப் பார்த்துக் கடலில் விழுந்து
இரண்டாம் முறை இறந்ததாகக் கேள்வி !

மாநகராட்சி சோடியம்
விளக்குகளால்
மாநாடே போட்டிருக்கிறது !
ஆதாம் - ஏவாள் எதற்கும்
கலங்குவதில்லை
அவசர ம்கசூல்தான்
அவர்களுக்கு முக்கியம்.

அலைகள் விளையாடி
ஆனந்தம் நிறைந்த
மெரினா கடற்கரையா ?
காம விளையாட்டுச்
சிற்பங்கள் நிறைந்த
கஜுராஹோ கோயிலா ?

' காதாலாகி... கசிந்துருகி...
கண்ணீர் மல்கி'
என்று எழுதியவன்
எழுதிய விரல்களை
வெட்டிக் கொள்வான்.
.
அதோ நம் கேமராவை
ஜீம் செய்கிறோம் !
ஒரு இரண்டு சக்கர
வாகன மறைவு
பள்ளிக்கூடச் சீருடைதான்
அவர்களுக்கு
ஒரு பெற்றோரின் கனவு
மாளிகைக்கு
மனித வெடிகுண்டாய்
மாறிக் கொண்டிருக்கிறார்கள் !
அவனும் - அவளம்.

எங்கே போகிறது இந்தியா ?
இந்தியர்கள்
அமெரிக்காவுக்கு போகலாம்.
இந்தியக் கலாச்சாரம்
அமெரிக்காவுக்குத் தாவுகிறதா ?
.
அதோ !
ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பகுதி
ஆதாம் அவளை
'தேவதை' என்கிறான்
ஏவாள் அவனை
'தேவன்' என்கிறாள்
கடைசியில் இருவருமே சாத்தான்கள் !

பாரதி இதைப் பார்த்திருந்தால்
தலைப்பாகையை கழற்றிவிட்டு
தண்டவாளத்தில் படுத்திருப்பான் !

கோவா கடற்கரை
அலைகளில் இருக்கும் கேவலம்
மெரினா கடற்கரை
அலைகளிலும் கலக்கிறதா ?

காதலர் என்ற் பெயரில்
இந்த சதைப் பிராணிகள் சிலது
தற்கொலை செய்து கொள்கின்றன.
மரணம் இவர்களால்
அசிங்கப்பட்டுப் போகிறது.

நம் கேமராவையே நம்மால்
நம்பமுடியவில்லை.
இரண்டு ஆதாம் ஓர் ஏவாள்
ஓர் ஆதாம் இரண்டு ஏவாள்

ஒன்று தெரியுமா ?
கவிஞர்கள் யாருமே இப்போது
கடற்கரைக்குப் போய்
கவிதை எழுதுவதில்லை.
கடற்கரைக்குப் போனால்
கவிதை எங்கே வருகிறது ?
காமம் தான் வருகிறது.

ஆப்பிள் கடித்தால்
அந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும்
மானமும், நாணமும் வந்ததாம் !
அந்த ஆப்பிள் எங்கே கிடைக்கும்
ஒரு லாரி ஆப்பிள்
அனுப்ப முடியுமா ?
இங்கே மானமும் நாணமும்
நிறைய வேண்டியிருக்கிறது !

இவ்வளவு நேரம்
இந்த நீல இனங்களை
'ஆதாம் ஏவாள்'
என்ற பெயர்களால் குறித்தேன்.

அந்த ஆதாம் - ஏவாள்
என்னை மன்னிப்பார்களா?

-------------------------------------------

புத்தகம் : வானவில் பூங்கா (குமரன் பதிப்பகம்)
ஆசிரியர் : பா.விஜய்

Wednesday, August 08, 2007

இந்த கருமங்கள தானா தினமும் படிக்கிறீங்க. . . .? [#32]

நண்பர் வீட்டுக்கு வார இறுதியை கழிக்க சென்றிருந்தேன். வழக்கம் போல பேச்சு, அரட்டை, சமையல் என்று சனிக்கிழமை ஒரு வழியாக கழிந்தது. முதல் நாள் தி.நகர் வர்தமான் பதிப்பகத்தில் வாங்கியிருந்த பார்த்திபன் கனவு ஞாபகம் வரவே . . . .

"டேய் பழைய நியூஸ் பேப்பர் எல்லாம் எங்கடா இருக்கு..." என்று நண்பரை வினவ வீட்டு ஹாலில் இருந்த அலமாரியை காட்டினார். . .

வசமாக அமர்ந்து கொண்டு, பேப்பரை எடுத்து புத்தகத்தில் வைத்து மடித்தேன். .. .

கள்ளக் காதலியின் கனவனை கொன்ற. . . .. என்று முன் அட்டைக்கு மேலே வர சீ இது வேண்டாம் என்று வேறு பேப்பரை துலவி எடுத்தேன்.

பிரசாந்த் மனைவி கிரக்கலெட்சுமியிடம் அவரது இரண்டு கனவர்களும். . . . . என்று செய்தியுடன் அந்த பெண்ணின் புகைப் படமும் வர அடுத்த பேப்பரை எடுத்தேன்.

அட தலைவர் சிவாஜி ஸ்டில்லு, சூப்பரு என்று முன் அட்டையில் ரஜினி படத்தை வைத்து மடிக்க, பின் அட்டையை ஏதோ ஒரு நாயகியின் தொப்புள் பிரதேசம் மட்டும் ஆக்கிரமித்திருந்தது, இதென்ன ஆனந்த விகடனா, தொப்புள மட்டும் தனியா ஒரு பக்கத்துல போடுறதுக்கு என்று மீண்டும் வேறு பேப்பரை துளவினேன்.


தொழில் அதிபர்களின் பட்டியலை வெளியிடுவேன், நடிகை எச்சரிக்கை . . . .

வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் போலீசில் தஞ்சம். . . . .. .

கனவர் சந்தேகப் பட்டதால் பெண் தீக்குளித்து தற்கொலை. . . . . .

நடிகையை நாய் கடித்தது. . . . . .

.
.
.
.
.
.

என்று அலமாரியில் இருந்த பேப்பர் எல்லம் ஹாலுக்கு வந்தது. . . . .

"டேய் என்னடா பண்ணிகிட்ருக்க. . . ." என்று நண்பர் அழைக்க திரும்பிப் பார்த்தேன்.


இல்லடா பஸ்ல போரப்ப படிக்கலாமேன்னு தான் அட்டை போட முயற்சி பண்ணேன். எதுக்கு நாமளும் பார்த்திபன் கனவு படிக்கிறோம்னு விளம்பரம், அதான் அட்டை என்று இழுத்தேன். . .

"அதுக்கு ஏண்டா இப்படி எல்லா பேப்பரையும் கலைச்சு போட்றுக்க. . . . ."

ஒரு நல்ல சேதி இருக்குற பேப்பர பார்த்து போடலாம்னு தான் தேடிக்கிட்டு இருக்கேன். . .

ஏண்டா இந்த கருமங்கள தானா தினமும் படிக்கிறீங்க. . . . .?


என்று நான் என்ன கேட்க, எல்லாமே இப்படி தான் இருக்கு நான் என்ன பண்ண நாட்ல நடக்குறத தெரிஞ்சுக்க வேண்டாமா. . . . .? என்று கேட்டான்.

அவனை அழைத்துச் சென்று, அவன் கனினியில் தமிழ்மணம் பக்கத்தை திறந்து புக் மார்க் செய்து, தினமும் இதை படி என்று சொல்லிவிட்டு கலைந்திருந்த பேப்பர்களை அடுக்கி வைக்க ஹாலுக்கு சென்றேன். . . .

Monday, June 25, 2007

எனக்குள் நான் எட்டிப்ப் பார்த்து போட்ட 8 விஷயங்கள் [#28]

நம்மள பத்தி 8 விஷயம் சொல்லனும்னு நம்மள இங்க கோத்து விட்ட குசும்பன் அவர்களுக்கு நன்றிய சொல்லிட்டு விஷயத்துக்கு வருவோம்.

கீழே சொல்லப் பட்ட விஷயங்கள் கதையோ கற்பனையோ அல்ல சொந்த வாழ்வில் நடந்த சுவாரசியங்கள் மட்டும் தான். . . . .

1. ஒன்னாவது படிக்கும் போது 1 வது ரேங்க் வாங்கியது.

அதுக்கப்புறம் அந்த மாதிரி எந்த தப்பையும் நான் பண்ணல.

சே என்னடா இது மார்க்கெல்லாம் 100, 90, 95 வாங்கிட்டு ரேங்க் மட்டும் ஒன்னு வாங்கிட்டோமே. வீட்டுக்கு போய் ஒரு ரேங்கு தான் வாங்கிருக்கேன்னு சொன்னா அடி தான் கிடைக்கும் சரி இனிமே எப்படியாவது படிச்சு 100 வது ரேங்க் வாங்கனும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு

டீச்சர் கிட்டே கேட்டேன்.

யாரு டீச்சர் 100 வது ரேங்க் . . . . . ?

100 வது ரேங்கெல்லாம் கிடையாது, கிளாஸ்ல எத்தன பேரு இருக்காங்களோ அத்தன ரேங்கு தான்.

சரி டீச்சர்.

(1 2 3 . . . . . . . . . எப்படியாவது படிச்சு கிளாஸ்லயே பெரிய ரேங்க் வாங்கனும் என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டேன்.)

2. இது உண்மையிலேயே சாதனை தான்.

டேய் டேய் டேய் அந்த புள்ளைய இறக்கி விடுடா என்று என் சித்தி கத்திக் கொண்டு வரும் போதே தம்பி புள்ளைய இறக்கி விட்ருங்க என்று அந்த குழந்தையின் தாயார் ஓடிவந்து கெஞ்சினார், அவரிடம் கொடுக்கும் போது இல்ல கீழயே இறக்கி விட்ருங்க என்று கேட்க கீழே இறக்கி விட்டேன்.

டேய் ஏன்டா அந்த புள்ளைய தூக்குன. . . .

இல்ல சித்தி பாவம் தரையில் உட்க்கார்ந்து அழுதுகிட்டு இருந்துச்சு அதான் பாவம்னு தூக்குனேன். . . .

அது ******* வூட்டு புள்ளடா அவுங்கள தொட்டா தீட்டுடா . . . . .

தீட்டுன்னா . . . . . . ?

தீடுன்னா தீட்டு அதிகப் பிரசிங்கி மாதிரி கேள்வியெல்லாம் கேட்காதே. . . . .

அந்த புள்ளையோட அம்மா நம்ம வயல்ல தான வேல பார்க்குறாங்க அப்ப அவுங்க தொட்ட அரிசியும் தீட்டு தானே . . . . . ?

இப்படி பல கேள்விகளால் என் சித்தியை துளைத்தெடுக்கும் போது எனக்கு வயது 10.

அதற்கு பிறகு இது போன்ற எந்த ஒரு செயலையும் செய்ய வில்லை என்ற வருத்தமும் உள்ளது.

3. கவிதை எழுதனுமா கூப்புடுடா வெங்கட்ராமனை அப்புடீங்கற மாதிரி ஒரு நிலமையை என்னுடைய 11 12 வகுப்புகளில் ஏற்படுத்தியது.

இப்ப நம்ம கிட்ட இருந்த சரக்கு எங்க போச்சுன்னு தெரியல கவிதையா கிலோ எவ்வளவுங்கிற நிலமைக்கு வந்தாச்சு.

4. கல்லூரிகளில் படிக்கும் போது ஒரு நாள் கூட கட் அடிக்காமல் லீவும் போடாமல் 3 வருடங்களும் எல்லா நாளும் கல்லூரிக்கு போனது.

6. இன்று வரை புகை, மது அருந்தாதது (குடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் இல்ல, குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் இல்ல :)

7. வெறும் 20- 30 பதிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு வருடத்திற்கும் மேலாக வலைப் பதிவுகளில் ஒட்டிக்கொண்டிருப்பது.

8. பிளாஸ்டிக் பாலிதீன் போன்றவற்றினால் ஏற்படும் தீங்குகளை முழுவதுமாக உணர்ந்து அவற்றின் உபயோகத்தினை குறைத்துள்ளது.


நான் அழைக்கும் எட்டு பேர்

கார்த்திகேயன்

Bad News India

ஜெய்சங்கர்.நா

வடுவூர் குமார்

செல்வன்

செல்வேந்திரன்


இட்லிவடை


.:: MyFriend ::.

(இது இவுங்களுக்கு அரியர் எக்ஸாம் இந்த தடவயாவது கரெக்டா பதிவு போட்டு பாஸாகனும்)



விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

Monday, June 18, 2007

ஏன் நாம் இப்படி ? [#27]

சென்ற வாரம் நடந்த சம்பவம் இது. பதிவாக எழுத வேண்டிய சம்பவம் இல்லை என்றாலும் என்னுள் எழுந்த எண்ணங்களும் கோபங்களுமே இந்தப் பதிவு.



டீலக்ஸ் பஸ்கள் போக சாதா பஸ் வரும் வரை காத்திருந்தேன். அரை மணி நேரம் காத்திருந்தலின் பயணாக சாதாரண பேருந்து கிடைத்தது. பேருந்து கொஞம் முக்கலும் முனகலுமாக நகர ஆரம்பித்தது. சிக்னலில் பேருந்தின் இயக்கத்தை நிறுத்திய ஓட்டுனர் மீண்டும் இயக்க முயற்சி செய்ய மீண்டும் அதே முக்கலும் முனகலும்.



ஏம்பா அதான் மக்கர் பண்ணுதுன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏன் சிக்னல்ல வண்டிய நிப்பாட்ற . . .?

சரி வாங்கப்பா கொஞ்சம் வண்டிய தள்ளுங்க.



என்று நடத்துனர் சொல்லிக் கொண்டே இறங்கி பேருந்துக்கு பின்னால் சென்றார். பேருந்தில் அதிகமான கூட்டம் இல்லை என்றாலும் எல்லா குறைந்தது 50க்கும் அதிகமானவர்கள் இருப்பார்கள் என்பது என் கனிப்பு. சரி என்று பேருந்தில் இருந்து இறங்கி சென்று பேருந்தை தள்ள ஆயத்தமானேன். பேருந்தில் இருந்த 50 பேர்களில் அதை தள்ள முற்பட்டவர்கள் என்னையும் சேர்த்து வெறும் 3 பேர் தான்.



அய்யா வாங்க
சார் வாங்க
கொஞ்சம் தள்ளுங்க.
வண்டி இங்கேயே
நின்னுச்சுன்னா டிராபிக் ஜாம் ஆயுடும். . . . .
வாங்க




என்று நடத்துனர் வெற்றிலை பாக்கு வைத்து கல்யானத்திற்கு அழைப்பதைப் போல் அழைக்க மெலும் நான்கு பேர் வந்து சேர்ந்து கொண்டனர். மற்றவர்கள் எல்லாம் பேருந்துக்குள்ளேயே அமர்ந்திருந்தனர்,



பேருந்தை தள்ளும் போது சற்றே கனத்தது, பேருந்தல்ல என் இதயம்.



ஒரு வழியாக பேருந்து இயங்க ஆரம்பிக்க பேருந்தில் ஏறினேன். மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நான் அமர்ந்திருந்த இருக்கை எங்கே என்று தெரியவில்லை எல்லாம் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது.



இந்த அளவிற்கா நாம் அறிவிழந்து சுயநலவாதியாகி விட்டோம். நாம் செல்லும் பேருந்து நின்று போய்விட்டது. நம் முயற்சியின்றி அதை இயங்க வைக்க முடியாது. அப்படி அது இயங்காமல் நின்று போனால் பாதிப்பு நமக்கு தான். இதை உணராமல் யாராவது நாலு இளிச்ச வாயங்க போய் தள்ளுவாங்க நாம வக்கனையா உட்கார்ந்திருப்போம் என்று



நாம் ஏன் இப்படி இருக்கிறோம்.



நாம் சென்று கொண்டிருக்கிற பேருந்தை சரியாக இயங்க வைக்க கூட நாம் முன் வராத போது நம்முடைய சமுதாயம் நல்ல முறையில் நடக்க நாம் என்ன செய்ய போகிறோம்.



நாம் ஏன் இப்படி . . . . .?

Wednesday, June 06, 2007

சென்னை மா நரகப் பேருந்துகள் [#26]

சென்னைக்கு வந்த நாட்கள் முதல் பெரும்பாலும் ரயில் போக்குவரததையும் ஷேர் ஆட்டோக்களையுமே தினசரி பயணங்களுக்கு பயண்படுத்தி வந்தேன், விடுமுறை நாட்களிலும் புதிய இடங்களுக்கு செல்லும் போது மட்டும் மாநகரப் பேருந்துகளை பயண்படுத்துவது வழக்கம். புதிய அலுவலகம் புதிய வேலை என்பதால் இப்போது மாநகரப் பேருந்துகளை மட்டுமே நம்பி பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

உலகிலேயே இத்தனை விதமான பேருந்துகள் சென்னையில் மட்டும் தான் இயக்கப் படுகிறது என்று நினைக்கிறேன்,




















































ரகம்குறைந்த பட்ச கட்டணம்
வெள்ளை போர்டு2 ரூபாய்பேருந்து தடம் எண் மற்று செல்லும் ஊர் பெயர்கள் வெள்ளை கலர் பலகையில் எழுதப்படிருக்கும்
மஞ்சள் போர்டு2.50 ரூபாய்பேருந்து தடம் எண் மற்று செல்லும் ஊர் பெயர்கள் மஞ்சள் கலர் பலகையில் எழுதப்படிருக்கும்
M சர்வீஸ்3 ரூபாய்பேருந்து தடம் எண்ணிற்கு முண்பாக M என்ற எழுத்து இருக்கும், உதாரணம் M5 கவனிக்க. M5 வேறு 5M வேறு
எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (அல்லது) பச்சை போர்டு பேருந்துகள்5 ரூபாய்
(கட்டணங்கள் எல்லாம் மஞ்சள் போர்டு வகை பேருந்து கட்டணத்தில் இரண்டு மட்டங்கு)
பேருந்து தடம் எண் மற்று செல்லும் ஊர் பெயர்கள் பச்சை கலர் பலகையில் எழுதப்படிருக்கும்
புளு லைன்நீல வண்ணப் பேருந்து
யெல்லோ லைன் மஞசள் வண்ணப் பேருந்து
ஆரஞ் லைன்ஆரஞ்ச் வண்ணப் பேருந்து


நான்கு வகையாக இருந்த பேருந்துகள் போதாது என்று புளு லைன், யெல்லோ லைன், ஆரஞ் லைன் வகை பேருந்துகளை அறிமுகப் படுத்தியது அரசு. இந்த புதுவகை பேருந்துகளில் அதிகம் இருப்பது டீலக்ஸ் பேருந்துகள் தான். இந்த டீலக்ஸ் வகை பேருந்துகளும் மஞ்சள் போர்டு பேருந்துகளின் கட்டணத்தைப் போல இரண்டு மடங்கு.



இத்தனை வகையான பேருந்துகள் இருந்தும், மக்களின் பேருந்துப் பயணம் என்பது மிகவும் கஷ்டமானதாகவே உள்ளது. குறிப்பாக டீலக்ஸ் வகை பேருந்துகள் தற்போது அதிகமாக இயக்கப் படுகின்றன, புதிதாக அறிமுகப் படுத்தும் பேருந்துகளும் டீலக்ஸ் வகைகளாகவே இருக்கின்றன. மாநகரப் பேருந்துகளில் தினசரிப் பயணம் செய்பவர்களுக்கு இந்த டீலக்ஸ் பேருந்துகள் பெரும் சுமையாகவே இருக்கின்றன. பீக் அவர்களில் பேருந்தை நம்பி இருப்போர் வரும் பேருந்து எந்த வகையை சேர்ந்தது என்று பார்த்து பொருமையாக செல்ல முடியாது. என்ன தான் சொகுசுப் பேருந்தாக இருந்தாலும் சரி சாதாரண பேருந்தாக இருந்தாலும் சரி கூட்ட நெரிசலில் செல்லும் போது எல்லாம் ஒன்றுதான்.தினமும் பேருந்துக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டி உள்ளது.


இத்தனை ரகப் பேருந்துகள் இருந்தும், இத்தனை ரக கட்டணங்கள் இருந்தும், எந்தப் பேருந்து எத்தனை மணிக்கு வரும், எப்போது போய் சேர்வோம் என்று எதையுமே உறுதியாக சொல்ல முடியாது.


இந்த வகை சொகுசுப் பேருந்துகளால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை எல்லா லாபமும் அரசாங்கத்திற்கே. நிர்வாகத்தை சீர் படுத்தி லாபம் அதிகரிக்கச் செய்யாமல் இப்படி மக்களை அடித்துப் பிடுங்குகிறது அரசாங்கம். எங்கள் ஊர்களில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் சென்று பாடம் கற்றுக்கொள்ள சோல்ல வேண்டும் போக்கு வரத்து அமைச்சரையும் அரசாங்க அலுவலர்களையும். மேலும் தனியார் பேருந்துகளில் வேலை செய்பவர்களுக்கு தொழிற்சங்கம் அமைப்பு என்று எதுவும் கிடையாது அதனால் தான் மக்கள் அவர்களால் பயண் அடைகிறார்கள்

ஏம்பா இருக்கறதே 10 ரூபா தான் இதுல 7 ரூவா டிக்கெட்டுங்கிறியே நான்
எப்படி திரும்பி வற்றதுன்னு கேட்ட ஒரு மூதாட்டியை அன்பாக பேசி அடுத்த நிறுத்ததில்
இறக்கி விட்டார் நடத்துனர்.

இப்படி பலரையும் கஷ்டப்படுத்துகிறது இந்த
சொகுசு(?) பேருந்துகள்


சரி விடுங்க பஸ்ஸுக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன். . ..

Thursday, March 01, 2007

லாலுவிடம் டியூசன் படிக்கும் ப.சிதம்பரம் [#20]

இந்த வருடமும் நல்ல பட்ஜெட்டை தாக்கல் செய்து, எல்லோருடைய பாராட்டுதலையும் பெற்று விட்டார் நம்ம ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ். அவருடைய இந்த நிர்வாக திறமையை குறித்து வியந்த நம்ம பிரதமர் மன்மோகன் சிங் அவரிடம் நிர்வாகம் பற்றி படித்து அவரைப் போலவே பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று, நம்ம வரி மந்திரி சாரி நிதி மந்திரி ப.சிதம்பரத்தை அவரிடம் டியூசன் அனுப்பி வைக்கிறார்.

லாலு டியூசனில் என்ன நடக்கிறது, இதோ. . . . . .

லாலு : வாய்யா சிதம்பரம், நம்ம பிரதமர் ரொம்ப உன்னோட நிலமைய நினைச்சி ரொம்ப வருத்தப் படராரு, உனக்கு மேனேஜ்மென்ட் பத்தி சொல்லிக் குடுக்க சொன்னார். நானும் என் மாட்டு தொழுவம் வேலையெல்லாம் ஒத்தி வச்சிட்டு வந்திருக்கேன், பாடத்த ஒழுங்கா கவனிக்கனும் என்ன. . . .

(ஹாவர்ட்ல MBA படிச்ச நான், இந்த ஆளுகிட்ட போய் மேனேஜ்மென்ட் படிக்கிற மாதிரி ஆயிடுச்சே, சரி விடு இவர எப்படியாவது நோஸ் கட் பண்ணி நாம பெரிய ஆளுன்னு இவருக்கு நிரூபிக்கனும். . . . என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு)

சிதம்பரம் : சரி சார்.

லாலு : இந்தா, பால் கோவா சாப்பிடு. எங்க வீட்ல பண்ணது.

சிதம்பரம் : ரொம்ப நல்லா இருக்கு சார்.

லாலு : பாடத்த ஆரம்பிப்போமா . . .

சிதம்பரம் : ஓகே, சார்.

லாலு : சரி, நான் ரயில்வே மினிஸ்டரா பதவி ஏற்கிரப்போ, ரயில்வே ரொம்ப நஷ்டத்தில இருந்தது. எனக்கு பதிலா நீ ரயில்வே மினிஸ்டரா ஆகியிருந்தா, வருமானத்த பெருக்க என்ன செய்வே. . . ?, சொல்லு.



சிதம்பரம் : பூ. இவ்ளோதானா, வெரி சிம்பிள்

* டிக்கெட் விலைய ஏத்துவேன்.
* ரிசர்வேசன் சார்ஜ்அ இரண்டு மடங்காக்குவேன்.
* பிளாட்பாரம் டிக்கெட் விலையையும் ஏத்துவேன்.
* சரக்கு கட்டணத்த உயர்த்துவேன்.
* எங்கயாவது வரி போட வாய்ப்பிருக்கான்னு பார்ப்பேன், அப்படி இருந்தா வரி போட்ருவேன்.
அப்புறம்
* பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்ட மட்டும் ஏத்த மாட்டேன், ஏன்னா என் பையனோ, எங்க குடுமத்தில உள்ளவங்களும் அதுல தான் போவோம்.

லாலு : புத்திசாலி, கைய நீட்டு.

இன்னும் கொஞ்சம் பால் கோவா கொடுக்க போராருன்னு நினைச்சி, நம்ம சிதம்பரம் கைய நீட்டுகிறார்.

பக்கத்தில் வைத்திருந்த பிரம்பை எடுத்து, சர மாரியாக அடி கொடுக்கிறார் லாலு.

சிதம்பரம் : ஐயோ, வலிக்குது, வலிக்குது, விட்றுங்க (என்று அலருகிறார்)

லாலு : ரயில்வே, வருமானத்த பெருக்க வழி சொல்ல சொன்னா, மக்கள் ரயில்வே துறைய மறக்கறதுக்கு வழி சொல்ற.

சிதம்பரம் : வேற என்ன பண்றது,



லாலு : நான் என்ன பண்ணேன்னு பாத்தியா. . . ?

சிதம்பரம் : இல்ல கவனிக்கல.

லாலு : அதெல்லாம் கவனிக்காத.

சிதம்பரம் : என்ன பண்ணீங்க கொஞ்சம் சொல்லுங்க.

லாலு : பொதுவாவே, வருமானதத அதிகப்படுதனும்னா, வாங்குறவன்கிட்ட அதிகமா வாங்க கூடாது, நாம எத்தன பேர் கிட்ட வாங்குறோமோ அவங்க எண்ணிக்கைய அதிகப் படுத்தனும். நான் என்ன பண்ணேன், சரக்கு போக்குவரத்த அதிகப் படுத்தினேன். மக்களுக்கு கஷ்டம் வராத மாதிரி வருமானத்த அதிகப் படுத்தினேன். அதனால என்னால டிக்கெட் விலையையும் குறைக்க முடிஞ்சது.

சிதம்பரம் : ஆமாம், இப்ப நான் என்ன பண்றது.

லாலு : அதையும் என்கிட்ட கேளு . . . ?

சிதம்பரம் : இல்ல எனக்கு வரி எப்படி போடனும்னு தான் தெரியும்.

லாலு : சரி கேளு, நம்ம நாட்ல இருக்குற 100 கோடி பேர்ல 2 கோடி பேர் தான் வரி கட்றாங்க, அதாவது 2 % பேர்தான், கரெக்டா. . . ?

சிதம்பரம் : கரெக்டு, கரெக்டு.

லாலு : அப்பன்னா அதிகமா வரி ஏய்பு நடக்குதுன்னு தானே அர்த்தம், இந்த 2 கோடி பேர்ங்கிறது 4 கோடியா ஆனாலே, மிகப்பெரிய சாதனை தான் இல்லியா.

சிதம்பரம் : ஆமா, ஆமா, எப்படி அதிகப்படுத்தறது.



லாலு : மொதல்ல வருமான வரித்துறைய சீர்படுத்தனும், ஏன்னா அங்க ஒருத்தவன் 10,000 ரூபா லஞ்சம் வாங்குனான்னா, நமக்கு வரியா வரவேண்டிய 10 லட்ச ரூபா வராம போயிடும்னு அர்ததம். நாட்ல விவசாயம் மட்டும்தான் வீணா போய்கிட்டு இருக்கு, மத்த தொழில் எல்லாம் நல்லா தான வளருது, அப்படீன்னா நமக்கு வர வேண்டிய வரியும் அதிகமாகனும் தானே. . .?

வரி கட்றவன்கிட்ட அதிகமா வரி வாங்கறத பத்தி யோசிக்க கூடாது, வரியே கட்டாம இருக்கிறவன கண்டுபிடிச்சி அவன் கிட்ட வரி வாங்கனும், புரியுதா. . .?

சிதம்பரம் : புரியுது, புரியுது (என்று கையை பின்னால் கட்டிக்கொள்கிறார்.)

லாலு : அதென்ன சேவை வரி, அதுவும் 12.5 %


http://www.servicetax.gov.in/servicetax/overview/ovw_pt-4.htm


http://ws.ori.nic.in/cenexbbsr/service_tax_trade_notice.htm


நீயும் லிஸ்ட சேர்த்துகிட்டே போற. உட்டா பிச்சக்காரனுக்கு 1 ரூபா போட்டாலும் 12.5 காசு வரியா போடனும்னு சொல்லுவ போலிருக்கு.

சிதம்பரம் : (இத எப்படி கண்டு பிடிச்சாருன்னு நினைத்துக்கொண்டே. .) அப்படி எல்லாம் இல்ல சார்.

லாலு : வருசா வருசம் வரியெல்லாம் ஏத்திக்கிட்டே போரியே, உனக்கே இது நியாயமா படுதா. Educational Cess ன்னு கட்ற வரியில 2% ன்னு சொன்ன அத 2.5%, 3% ன்னு ஏத்திகிட்டே போரியே எப்பதான் நிருத்துவ.

சிதம்பரம் : அவங்கள நிருத்த சொல்லு, நான் நிருத்துறன்.

லாலு : யாரு நிருத்தனும், வரி கட்றவனெல்லாம் நிருத்துனாதான், நீ நிருத்துவ. டயலாக் அடிக்காம பாடத்த கவனி.

சிதம்பரம் : சரிங்க.

லாலு : வரி அதிகமா இருந்தாலே, அத கட்றதுக்கு மக்கள் விரும்ப மாட்டாங்க, மக்களுக்கு வரி கட்டவேண்டிய அவசியத்த புரிய வைக்கனும், அவங்கள கஷ்டப்படுத்தாம வரி வாங்கனும். அதே மாதிரி, வரி ஏய்பு செய்ரவங்களையும், அவர்களுக்கு துணை போற அதிகாரிகளையும் தண்டிக்கணும். நிர்வாகத்த தொடர்ந்து கண்கானிக்கனும், நீ உன் பையன தான் அதிகமா கவனிக்கிற, அவன பெரிய ஆளா ஆக்கதான் முயற்சி பண்ற. உன் பையனுக்கு திறமை இருந்தா(?) தானா பெரிய ஆளா ஆயிடுவான், தேவையில்லாத விளம்பரம் எல்லாம் பண்ணாத புரியுதா. . . ?

சிதம்பரம் : (மாட்ட குளிப்பாட்ற வேலை பார்த்துகிட்டே, நம்ம பையனோட கருடாஸ் அமைப்ப பத்தியும், தமிழ் நாட்ல ஒட்ன போஸ்டர பத்தியும் எப்படி தெரிஞ்சுகிட்டாரு, ஜெகஜால கில்லாடியா இருப்பாரு போல . . . என்று நினைத்துக்கொண்டு) புரியுது, புரியுது என்று வேகமாக தலையை ஆட்டுகிறார்.

லாலு : மொதல்ல "Save Tax" ன்னு பெருசா போட்டு வற்ற விளம்பரத்த எல்லாம் நிப்பாட்டு, வரின்னாலே, கட்ட கூடாது சேமிக்கனும்ன்கிற என்னத்தான் அது வளர்க்குது.

சிதம்பரம் : சரி, வரி சேமிக்கும் திட்டங்கள் எல்லாத்தையும் உடனே நிப்பாட்டிடலாம்.

லாலு : கைய நீட்டு. . . .

சிதம்பரம் : ம் மாட்டேன், ஏற்கனவே அடிச்சது இன்னும் வலிக்குது.

லாலு : வரிய சேமிக்கிற திட்டத்த நிப்பாட்ட சொல்லல, விளம்பரத்த தான் நிப்பாட்ட சொன்னேன், திட்டத்த நிப்பாட்றது சரி இல்ல.



சிதம்பரம் : நல்லா புரியுது.

லாலு : சரி இன்னிக்கு இது போதும், அடுத்த கிளாஸ் எப்போன்னு அப்பறம் சொல்றேன், கிளம்பு. இந்தா, எங்க ஊர்ல சட்ட இல்லாம நிறைய பேர் இருப்பாங்க, அவங்க முதுகுலையும் எதாவது வரிய போட்றாத, பார்த்து பத்திரமா போ.

சிதம்பரம் : சரீங்க, நான் கிளம்புறேன்.

லாலு : சரி நீ கிளம்பு நான் போய் பால் கறக்கனும்.

Thursday, February 15, 2007

என் காதலர் தின அனுபவம். . . .[#19]

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு வந்த காதலர் தினத்தை என்னால் மறக்க முடியாது, காரணம் என் காதலால் அல்ல யாரோ ஒரு பெண் யாரோ ஒரு பையன் மேல் கொண்ட காதலால். என்ன வித்தியாசமா இருக்கேன்னு நினைக்கிறீங்களா, விபரம் கீழே.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம், எங்கள் ஊரில் இருந்து தஞ்சைக்கு தினமும் பேருந்தில் சென்று வந்தேன். தினமும் எங்கள் ஊர் பேருந்து நிலையம் செல்வது வழக்கம். பேருந்து நிலையத்தில் உள்ள STD பூத்தை தினம் பார்க்க தவறுவதில்லை, காரணம் அதில் வேலை பார்க்கும் ஒரு பெண் தான் (காலேஜ் படிக்கிறப்ப வேற என்ன காரணம் இருக்க முடியும்). நிறத்துக்கும் அழகுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அந்த பெண்ணை பார்த்துதான் உணர்ந்து கொண்டேன் (சத்தியமா, வேற எந்த காரணமும் இல்லை, இது முனீஸ்வரர் மேலே சத்தியம்).

ஒரு காதலர் தினம் வந்தது, காலையில் காலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு, ஊருக்கு திரும்பிய போது STD பூத்தில் அந்தப் பெண்ணை காணவில்லை, வீட்டுக்கு திரும்பினேன். வழக்கம் போல் மறு நாள் பேருந்து நிலையம் சென்றேன், அந்த STD பூத்தில் அந்தப் பெண்ணை காணவில்லை. ஆனால் வேறு ஒரு வயதான பெண் கண்ணீர் விட்டு புலப்பிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. விசாரித்ததில் அந்த பெண்ணின் தாயார் அவர் என்பதும், நேற்று காதலர் தினத்தன்று, அந்தப் பெண் ஒரு பையனோடு ஊரை விட்டு சென்று விட்டதாக தெரிந்தது. அந்தப் பெண்ணின் தாயாரின் கண்ணீரை இன்று வரை மறக்க முடியவில்லை.

காதலில் தன்னை மறக்கிறவர்கள், தங்கள் சொந்தங்களையும் மறந்து விடுகிறார்கள்.
அவர்களின் சந்தோஷத்திற்காக, எத்தனை பேரை வருத்தப் பட வைக்கிறார்கள் . . . . . ?

இது தேவையா. . . . . . ?



பெரும்பாலானோருக்கு காதல் வருவதே இல்லை,
காதல் வந்ததாகவே எண்ணிக்கொள்கிறார்கள். . . .

Wednesday, February 14, 2007

ஏர்போர்ட்டில் ரஜினிக்கு பதிலாக வேறு சில பிரபலங்கள் இருந்திருந்தால். . . [#18]

ஏர்போட்டில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் ரஜினி தலையிட்டு அவருக்கு நியாயம் கேட்கவில்லை என்று பத்திரிக்கையில் செய்தி வந்தது.

நடந்ததையெல்லாம் மீண்டும் அவரிடம் எடுத்துச் சொல்லி, இதில் என்ன தவறு இருக்கிறது? பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களாவது இதைத் தட்டிக் கேட்கக்கூடாதா?’ .
என்று ரஜினியிடம் கூறி இருக்கிறார்.

அன்று ஏர்போர்ட்டில் ரஜினிக்கு பதிலாக வேறு சில பிரபலங்களிடம் அந்த பெண் முறையிட்டிருந்தால் . . . . . . .
(ஒரு சின்ன கற்பனை)

நம்ம தயாநிதி மாறன் :

அப்படியா, இது என்ன அநியாயம், இதுதான் நீங்க வாடிக்கையாளர்களை நடத்துற விதமா என்று அதிகாரிகளை கடிந்து கொண்டு, போனில் சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பேசி அந்த பெண்மணியின் பிரச்சனைன்யை தீர்த்து வைக்கிறார்.

ரொம்ப நன்றிங்க என்று அந்த பெண்மணி சொல்ல, இது என் கடமைங்க, இத பிரஸ் மீட்ல சொல்லுங்க அப்பதான் இவங்களுக்கு புத்தி வரும் என்கிறார்.

சன் டி.வி க்கும் மற்ற பத்திரிக்கைகளுக்கும் போன் செய்து அவர்களை வரவைக்கிறார்.
(இடையில் பொது மக்கள் பிரச்சனையை தீர்த்து வைத்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் - விபரம் 8 மணி செய்தியில் என்று சன் டி.வி ல் கீழே செய்தி வருகிறது)


பத்திரிக்கை, டி.வி என்று எல்லோரும் வந்து விட, அவர்களிடம் நடந்த வற்றை விபரமாக கூறுகிறார். சன் டி.வி யில் வரப்போகிறோம் என்ற சந்தோஷத்துடன் Boarding Pass வாங்க வருகிறார் அந்த பெண்மணி.

விமான நிலைய அதிகாரிகள் அந்த பெண்மணியிடம் "நீங்க போக வேண்டிய விமானம் போய்விட்டது, இனிமேல் நாளை தான் விமானம், அதிலும் நீங்கள் புதிதாக டிக்கெட் வாங்கினால் தான் போகமுடியும் என்கிறார்கள்"

வெறுத்துப் போய் வீட்டுக்கு வரும் போது, சன் டி.வி யில் அவரது பேட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. . . . .


கமுதம் ஆசிரியர் திரு.சினிமா மலம் திண்ணி :

அம்மா இது உங்க பிரச்சனை, இதுல நான் என்ன பண்ண முடியும், நான் ஒரு பத்திரிக்கை ஆசிரியர எனக்கு நடிகைய நாய் கடிச்ச விவகாரம், நயன் தாரா சிம்பு விவகாரம், சினிமா கலைஞர்களின் அந்தரங்க விஷயம், மக்களுக்கு உபயோகம் இல்லாத விஷயம் இதுல தான் நான் தலையிட முடியும், பொது மக்களை பத்தி நான் கவலைப் பட முடியாது.

அவரிடம் இருந்து விலகி சென்று, செல் போனில்

ஹலோ, வற்ற இஷ்யூல "விமானத்திற்காக ஒரு மணி நேரம் காத்திருந்த அசின்" ன்னு ஒரு பக்க நீயூசுக்கு இடம் ஒதுக்குங்க, விபரத்த மெயில்ல அனுப்புறேன், விஷயத்தோட லேட்டஸ்ட் அசின் படத்தையும் போட்றுங்க

என்று சொல்லியபடி அங்கிருந்து நகர்ந்தார்.


விஜய டி.ராஜேந்தர் :

டேய் வித்தவுட்டு,
இந்தாடா கமர்கட்டு,
இல்லையா இவங்களுக்கு டிக்கெட்டு,
வீராசாமிக்கு இருக்கு கட்டவுட்டு,
இன்னைக்கும் ட்.ஆர் நாட் அவுட்டு,
சிம்புவுக்கு தான் டா மார்க்கெட்டு,
போடபேறேன் உனக்கு மாவு கட்டு,
இந்தா வீரா சாமி டிக்கெட்டு,
இத வச்சிக்கிட்டு,
கொடு இவங்களுக்கு விமான டிக்கெட்டு,

என்று வீராசாமி டிக்கெட்டை விசிறி அடிக்கிறார்

இவ்வளவு கிலோசப்பில் டி.ஆர் ஐ பார்த்து, அவர் DTS சவுண்டில் அரண்டு போண அதிகாரி, தன் மீது வீசப்பட்ட வீராசாமி டிக்கெட்டை வேகமாக தட்டிவிட்டு, அம்மா இந்தாங்க விமான டிக்கெட், என்ன ஆளை விடுங்க என்று மருத்துவமனைக்கு விரைகிறார்.



வேறு சிலரிடம் முறையிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று, பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

Friday, January 19, 2007

சென்னையில் பேருந்து கட்டணம் உயர்கிறதா. . . ?

பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று எந்த அறிவிப்பும் வரவில்லை வரும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆனால் படிப்படியாக இந்த கட்டண உயர்வு அமல் படுத்தப் படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. ஒரே நாளில் வந்த சந்தேகம் அல்ல இது

பேருந்தில் ஏறி நடத்துனரிடம் 2 ரூ கொடுத்து தி.நகர் என்று சொல்லி டிக்கெட் கேட்டேன், 3 ரூபாய் என்று சொன்னார். ஏன் தி.நகர் இங்கிருந்து 2 ஸ்டாப் தானே எதற்கு 3 ரூபாய் என்று கேட்டேன் M சர்வீஸ் என்று பதில் சொன்னார்.

பல முறை இதே போல் நடக்க, ஒரு நடத்துனரிடம் இதைப் பற்றி தெரிந்து கொள்ள கேட்டேன்.

வெள்ள போடுன்னா 2 ரூபாய், ஸ்டாப் அதிகமா இருக்கும்
மஞ்சள் போடுன்னா 2 ரூபாய் 50 காசு, ஸ்டாப் கம்மியா இருக்கும்
அதென்ன M சர்வீஸ் . . . ? என்று கேட்டேன்.

M Service

தம்பி M சர்வீஸ் னா, ஸ்டாப்பும் ஜாஸ்தியா இருக்கும் காசு ஜாஸ்தியா இருக்கும் மினிமமே 3 ரூபாய் தான் என்று சொன்னார்.

என்னங்க புரியலயே என்று கேட்டேன்.

நான் என்னப்பா பண்றது அவங்க சொல்ற மாதிரி தானே நான் டிக்கேட் போடமுடியும் என்று பதில் சொன்னார்.

அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஆனால் இப்போது M சர்வீஸ் அதிகமாகிவிட்டன, எல்லா வழித்தடங்களிலும் M சர்வீஸ் இயங்கி வருகின்றன. சாதாரன பேருந்துகள் இப்போது M சர்வீஸ் ஆகா மாற்றப் படுகின்றனவோ என்று சந்தேகம் வருகிறது.

பேருந்து கட்டணத்தை வெளிப்படையாக உயர்த்தாமல், இப்படி பாதி வழித்தடங்களை M சர்வீசாக மாற்றுவதன் மூலம் இந்த கட்டண உயர்வை செய்து விட நினைக்கிறார்களோ என்று நினைக்கிறேன். நன்றாக கவனிக்கவும் நினைக்கிறேன் இது என் சந்தேகமும் யூகமும் தானே தவிர வேறு எதுவும் இல்லை.

போக்கு வரத்து துறையை சார்ந்தவர்கள் யாரேனும் இருந்தால், சரியான் விளக்கம் தரலாமே. . . . . .

Image Courtesy
http://frank.itlab.us/worldtrip_2002/transport_bus.jpg

Monday, January 01, 2007

இயக்குனர், தயாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை [#14]

இயக்குனர் ஷங்கர் சமூக அக்கறை கொண்டவர் என்பது, அவரது திரைப் படங்களில் இருந்தே தெரியும். அவரை நல்ல இயக்குனர் என்று மட்டுமே நினைத்து வந்தேன், அந்நியன் படத்திற்கு பிறகு தான் அவருக்கு இந்த சமூகத்தின் மீது இருந்த அக்கறையும் புரிந்தது.

Director Shankar

சமுதாயத்தின் மீதான என்னோட ஆதங்கத்தை ராமானுஜம் கேரக்டர் வெளிப்படுத்தும்
- ஷங்கர் (அந்நியன் பட்த்தைப் பற்றி அளித்த பேட்டியில்)


அந்நியன் படத்திற்கு பிறகு, ஒரு நல்ல இயக்குனர் என்று மட்டும் இல்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் அவரை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.

சரி இப்ப எதுக்கு அந்நியன் படத்த பத்தி இவ்வளவு லேட்டா பேசற, வேற ஏதும் சரக்கு இல்லயான்னு . . ? தானே கேக்க வற்றீங்க.. .. .. .. விஷயம் இருக்கு சொல்றேன், சும்மா ஒரு பில்டப்பு. இயக்குனர் ஷங்கரின் நேர்மையை தான் மேலே சொன்னேன். தாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை இதோ.. ... ... ...

நேற்று வெயில் படம் பார்த்தேன், வெயில் படம் பற்றி எல்லோரும் எழுதி விட்டார்கள். நான் கவனித்த விஷயங்கள், என்னைக் கவர்ந்த விஷயங்களை மட்டுமே நான் சொல்ல விளைகிறேன். படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது நல்ல படம் பார்த்த சந்தோஷம் இருந்தது மட்டும் இல்லாமல், அதன் பாதிப்பு அன்று முழுவதும் இருந்தது.

படத்தில் விளம்பர கம்பெனி வைத்திருப்பவராக பரத் வருகிறார், அவர் விளம்பரம் செய்வது எல்லாம் நம்மூரு பொருட்களுக்குதான், திலகராஜ் டெக்ஸ்டைல்ஸ், பவண்டோ, அனில் சேமியா, அபீஸ் காபி. . . . . . . . . . . . என்று பட்டியல் நீளுகிறது. தாயாரிப்பாளர் ஷங்கர் நினைத்திருந்தால் ஆட்டு மூத்திரம் அக்கா மாலாவுக்கோ(COKE), கப்சிக்கோ(PEPSI) அல்லது வேறு ஏதோ ஒரு வெளிநாட்டு கும்பெனிக்கோ பரத் விளம்பரம் செய்வது போல் காட்டி படம் வெளிவருவதற்கு முன்பே லாபம் பார்த்திருக்கலாம். அப்படி இல்லாமல் ராம்ராஜ் வேஷ்டிகள் என்று விளம்பரம் செய்வது போல் காட்டி இருப்பது அவர்து சமூக அக்கறை வெளிப்படுத்துகிறது.

Imasai Arasan

இம்சை அரசன் படத்தில் கூட COKE மற்றும் PEPSIக்கு எதிராக அவர் காட்சி அமைக்க ஒப்புக்கொண்டதையும் பாராட்ட வேண்டும். இம்சை அரசன் படத்தில் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, இண்டர்வெல்ல அந்த ஆட்டு மூத்திரத்த குடிக்கும் மக்களை பார்க்கும் போது சிரிப்பும் கோபமும் தான் வந்தது. ஏன்யா உங்களுக்கெல்லாம் மூளை இருக்கா, இல்லையா என்று கேட்க தோன்றியது. அப்படி கேட்ருந்தா, கும்மியிருக்க மாட்டாங்க.

சரி விடுங்க, நல்ல இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து, நல்ல படங்களை நமக்கு தந்த தயாரிப்பாளர் ஷங்கருக்கு நன்றி சொல்வோம், மேலும் நல்ல படங்கள் தர வாழ்த்துவோம்.

நம்மூர் பெரிய நட்சத்திரங்கள் எப்போது மாறப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்களாக COKE'' பாட்டிலுடன் விக்ரமையும், 'PEPSI' டின்னுடன் விஜயையும். 'MIRINDA' பாட்டிலுடன் விவேக் ஐயும் பார்க்க முடிவதில்லை, இது இப்படியே தொடர்ந்தால் நன்றாயிருக்கும். நம்ம சித்தி தான் அடங்க மாட்டேங்கிறாங்க.