Friday, January 19, 2007

சென்னையில் பேருந்து கட்டணம் உயர்கிறதா. . . ?

பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று எந்த அறிவிப்பும் வரவில்லை வரும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆனால் படிப்படியாக இந்த கட்டண உயர்வு அமல் படுத்தப் படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. ஒரே நாளில் வந்த சந்தேகம் அல்ல இது

பேருந்தில் ஏறி நடத்துனரிடம் 2 ரூ கொடுத்து தி.நகர் என்று சொல்லி டிக்கெட் கேட்டேன், 3 ரூபாய் என்று சொன்னார். ஏன் தி.நகர் இங்கிருந்து 2 ஸ்டாப் தானே எதற்கு 3 ரூபாய் என்று கேட்டேன் M சர்வீஸ் என்று பதில் சொன்னார்.

பல முறை இதே போல் நடக்க, ஒரு நடத்துனரிடம் இதைப் பற்றி தெரிந்து கொள்ள கேட்டேன்.

வெள்ள போடுன்னா 2 ரூபாய், ஸ்டாப் அதிகமா இருக்கும்
மஞ்சள் போடுன்னா 2 ரூபாய் 50 காசு, ஸ்டாப் கம்மியா இருக்கும்
அதென்ன M சர்வீஸ் . . . ? என்று கேட்டேன்.

M Service

தம்பி M சர்வீஸ் னா, ஸ்டாப்பும் ஜாஸ்தியா இருக்கும் காசு ஜாஸ்தியா இருக்கும் மினிமமே 3 ரூபாய் தான் என்று சொன்னார்.

என்னங்க புரியலயே என்று கேட்டேன்.

நான் என்னப்பா பண்றது அவங்க சொல்ற மாதிரி தானே நான் டிக்கேட் போடமுடியும் என்று பதில் சொன்னார்.

அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஆனால் இப்போது M சர்வீஸ் அதிகமாகிவிட்டன, எல்லா வழித்தடங்களிலும் M சர்வீஸ் இயங்கி வருகின்றன. சாதாரன பேருந்துகள் இப்போது M சர்வீஸ் ஆகா மாற்றப் படுகின்றனவோ என்று சந்தேகம் வருகிறது.

பேருந்து கட்டணத்தை வெளிப்படையாக உயர்த்தாமல், இப்படி பாதி வழித்தடங்களை M சர்வீசாக மாற்றுவதன் மூலம் இந்த கட்டண உயர்வை செய்து விட நினைக்கிறார்களோ என்று நினைக்கிறேன். நன்றாக கவனிக்கவும் நினைக்கிறேன் இது என் சந்தேகமும் யூகமும் தானே தவிர வேறு எதுவும் இல்லை.

போக்கு வரத்து துறையை சார்ந்தவர்கள் யாரேனும் இருந்தால், சரியான் விளக்கம் தரலாமே. . . . . .

Image Courtesy
http://frank.itlab.us/worldtrip_2002/transport_bus.jpg

Monday, January 01, 2007

இயக்குனர், தயாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை [#14]

இயக்குனர் ஷங்கர் சமூக அக்கறை கொண்டவர் என்பது, அவரது திரைப் படங்களில் இருந்தே தெரியும். அவரை நல்ல இயக்குனர் என்று மட்டுமே நினைத்து வந்தேன், அந்நியன் படத்திற்கு பிறகு தான் அவருக்கு இந்த சமூகத்தின் மீது இருந்த அக்கறையும் புரிந்தது.

Director Shankar

சமுதாயத்தின் மீதான என்னோட ஆதங்கத்தை ராமானுஜம் கேரக்டர் வெளிப்படுத்தும்
- ஷங்கர் (அந்நியன் பட்த்தைப் பற்றி அளித்த பேட்டியில்)


அந்நியன் படத்திற்கு பிறகு, ஒரு நல்ல இயக்குனர் என்று மட்டும் இல்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் அவரை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.

சரி இப்ப எதுக்கு அந்நியன் படத்த பத்தி இவ்வளவு லேட்டா பேசற, வேற ஏதும் சரக்கு இல்லயான்னு . . ? தானே கேக்க வற்றீங்க.. .. .. .. விஷயம் இருக்கு சொல்றேன், சும்மா ஒரு பில்டப்பு. இயக்குனர் ஷங்கரின் நேர்மையை தான் மேலே சொன்னேன். தாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை இதோ.. ... ... ...

நேற்று வெயில் படம் பார்த்தேன், வெயில் படம் பற்றி எல்லோரும் எழுதி விட்டார்கள். நான் கவனித்த விஷயங்கள், என்னைக் கவர்ந்த விஷயங்களை மட்டுமே நான் சொல்ல விளைகிறேன். படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது நல்ல படம் பார்த்த சந்தோஷம் இருந்தது மட்டும் இல்லாமல், அதன் பாதிப்பு அன்று முழுவதும் இருந்தது.

படத்தில் விளம்பர கம்பெனி வைத்திருப்பவராக பரத் வருகிறார், அவர் விளம்பரம் செய்வது எல்லாம் நம்மூரு பொருட்களுக்குதான், திலகராஜ் டெக்ஸ்டைல்ஸ், பவண்டோ, அனில் சேமியா, அபீஸ் காபி. . . . . . . . . . . . என்று பட்டியல் நீளுகிறது. தாயாரிப்பாளர் ஷங்கர் நினைத்திருந்தால் ஆட்டு மூத்திரம் அக்கா மாலாவுக்கோ(COKE), கப்சிக்கோ(PEPSI) அல்லது வேறு ஏதோ ஒரு வெளிநாட்டு கும்பெனிக்கோ பரத் விளம்பரம் செய்வது போல் காட்டி படம் வெளிவருவதற்கு முன்பே லாபம் பார்த்திருக்கலாம். அப்படி இல்லாமல் ராம்ராஜ் வேஷ்டிகள் என்று விளம்பரம் செய்வது போல் காட்டி இருப்பது அவர்து சமூக அக்கறை வெளிப்படுத்துகிறது.

Imasai Arasan

இம்சை அரசன் படத்தில் கூட COKE மற்றும் PEPSIக்கு எதிராக அவர் காட்சி அமைக்க ஒப்புக்கொண்டதையும் பாராட்ட வேண்டும். இம்சை அரசன் படத்தில் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, இண்டர்வெல்ல அந்த ஆட்டு மூத்திரத்த குடிக்கும் மக்களை பார்க்கும் போது சிரிப்பும் கோபமும் தான் வந்தது. ஏன்யா உங்களுக்கெல்லாம் மூளை இருக்கா, இல்லையா என்று கேட்க தோன்றியது. அப்படி கேட்ருந்தா, கும்மியிருக்க மாட்டாங்க.

சரி விடுங்க, நல்ல இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து, நல்ல படங்களை நமக்கு தந்த தயாரிப்பாளர் ஷங்கருக்கு நன்றி சொல்வோம், மேலும் நல்ல படங்கள் தர வாழ்த்துவோம்.

நம்மூர் பெரிய நட்சத்திரங்கள் எப்போது மாறப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்களாக COKE'' பாட்டிலுடன் விக்ரமையும், 'PEPSI' டின்னுடன் விஜயையும். 'MIRINDA' பாட்டிலுடன் விவேக் ஐயும் பார்க்க முடிவதில்லை, இது இப்படியே தொடர்ந்தால் நன்றாயிருக்கும். நம்ம சித்தி தான் அடங்க மாட்டேங்கிறாங்க.