Monday, June 25, 2007

எனக்குள் நான் எட்டிப்ப் பார்த்து போட்ட 8 விஷயங்கள் [#28]

நம்மள பத்தி 8 விஷயம் சொல்லனும்னு நம்மள இங்க கோத்து விட்ட குசும்பன் அவர்களுக்கு நன்றிய சொல்லிட்டு விஷயத்துக்கு வருவோம்.

கீழே சொல்லப் பட்ட விஷயங்கள் கதையோ கற்பனையோ அல்ல சொந்த வாழ்வில் நடந்த சுவாரசியங்கள் மட்டும் தான். . . . .

1. ஒன்னாவது படிக்கும் போது 1 வது ரேங்க் வாங்கியது.

அதுக்கப்புறம் அந்த மாதிரி எந்த தப்பையும் நான் பண்ணல.

சே என்னடா இது மார்க்கெல்லாம் 100, 90, 95 வாங்கிட்டு ரேங்க் மட்டும் ஒன்னு வாங்கிட்டோமே. வீட்டுக்கு போய் ஒரு ரேங்கு தான் வாங்கிருக்கேன்னு சொன்னா அடி தான் கிடைக்கும் சரி இனிமே எப்படியாவது படிச்சு 100 வது ரேங்க் வாங்கனும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு

டீச்சர் கிட்டே கேட்டேன்.

யாரு டீச்சர் 100 வது ரேங்க் . . . . . ?

100 வது ரேங்கெல்லாம் கிடையாது, கிளாஸ்ல எத்தன பேரு இருக்காங்களோ அத்தன ரேங்கு தான்.

சரி டீச்சர்.

(1 2 3 . . . . . . . . . எப்படியாவது படிச்சு கிளாஸ்லயே பெரிய ரேங்க் வாங்கனும் என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டேன்.)

2. இது உண்மையிலேயே சாதனை தான்.

டேய் டேய் டேய் அந்த புள்ளைய இறக்கி விடுடா என்று என் சித்தி கத்திக் கொண்டு வரும் போதே தம்பி புள்ளைய இறக்கி விட்ருங்க என்று அந்த குழந்தையின் தாயார் ஓடிவந்து கெஞ்சினார், அவரிடம் கொடுக்கும் போது இல்ல கீழயே இறக்கி விட்ருங்க என்று கேட்க கீழே இறக்கி விட்டேன்.

டேய் ஏன்டா அந்த புள்ளைய தூக்குன. . . .

இல்ல சித்தி பாவம் தரையில் உட்க்கார்ந்து அழுதுகிட்டு இருந்துச்சு அதான் பாவம்னு தூக்குனேன். . . .

அது ******* வூட்டு புள்ளடா அவுங்கள தொட்டா தீட்டுடா . . . . .

தீட்டுன்னா . . . . . . ?

தீடுன்னா தீட்டு அதிகப் பிரசிங்கி மாதிரி கேள்வியெல்லாம் கேட்காதே. . . . .

அந்த புள்ளையோட அம்மா நம்ம வயல்ல தான வேல பார்க்குறாங்க அப்ப அவுங்க தொட்ட அரிசியும் தீட்டு தானே . . . . . ?

இப்படி பல கேள்விகளால் என் சித்தியை துளைத்தெடுக்கும் போது எனக்கு வயது 10.

அதற்கு பிறகு இது போன்ற எந்த ஒரு செயலையும் செய்ய வில்லை என்ற வருத்தமும் உள்ளது.

3. கவிதை எழுதனுமா கூப்புடுடா வெங்கட்ராமனை அப்புடீங்கற மாதிரி ஒரு நிலமையை என்னுடைய 11 12 வகுப்புகளில் ஏற்படுத்தியது.

இப்ப நம்ம கிட்ட இருந்த சரக்கு எங்க போச்சுன்னு தெரியல கவிதையா கிலோ எவ்வளவுங்கிற நிலமைக்கு வந்தாச்சு.

4. கல்லூரிகளில் படிக்கும் போது ஒரு நாள் கூட கட் அடிக்காமல் லீவும் போடாமல் 3 வருடங்களும் எல்லா நாளும் கல்லூரிக்கு போனது.

6. இன்று வரை புகை, மது அருந்தாதது (குடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் இல்ல, குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் இல்ல :)

7. வெறும் 20- 30 பதிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு வருடத்திற்கும் மேலாக வலைப் பதிவுகளில் ஒட்டிக்கொண்டிருப்பது.

8. பிளாஸ்டிக் பாலிதீன் போன்றவற்றினால் ஏற்படும் தீங்குகளை முழுவதுமாக உணர்ந்து அவற்றின் உபயோகத்தினை குறைத்துள்ளது.


நான் அழைக்கும் எட்டு பேர்

கார்த்திகேயன்

Bad News India

ஜெய்சங்கர்.நா

வடுவூர் குமார்

செல்வன்

செல்வேந்திரன்


இட்லிவடை


.:: MyFriend ::.

(இது இவுங்களுக்கு அரியர் எக்ஸாம் இந்த தடவயாவது கரெக்டா பதிவு போட்டு பாஸாகனும்)விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

Monday, June 18, 2007

ஏன் நாம் இப்படி ? [#27]

சென்ற வாரம் நடந்த சம்பவம் இது. பதிவாக எழுத வேண்டிய சம்பவம் இல்லை என்றாலும் என்னுள் எழுந்த எண்ணங்களும் கோபங்களுமே இந்தப் பதிவு.டீலக்ஸ் பஸ்கள் போக சாதா பஸ் வரும் வரை காத்திருந்தேன். அரை மணி நேரம் காத்திருந்தலின் பயணாக சாதாரண பேருந்து கிடைத்தது. பேருந்து கொஞம் முக்கலும் முனகலுமாக நகர ஆரம்பித்தது. சிக்னலில் பேருந்தின் இயக்கத்தை நிறுத்திய ஓட்டுனர் மீண்டும் இயக்க முயற்சி செய்ய மீண்டும் அதே முக்கலும் முனகலும்.ஏம்பா அதான் மக்கர் பண்ணுதுன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏன் சிக்னல்ல வண்டிய நிப்பாட்ற . . .?

சரி வாங்கப்பா கொஞ்சம் வண்டிய தள்ளுங்க.என்று நடத்துனர் சொல்லிக் கொண்டே இறங்கி பேருந்துக்கு பின்னால் சென்றார். பேருந்தில் அதிகமான கூட்டம் இல்லை என்றாலும் எல்லா குறைந்தது 50க்கும் அதிகமானவர்கள் இருப்பார்கள் என்பது என் கனிப்பு. சரி என்று பேருந்தில் இருந்து இறங்கி சென்று பேருந்தை தள்ள ஆயத்தமானேன். பேருந்தில் இருந்த 50 பேர்களில் அதை தள்ள முற்பட்டவர்கள் என்னையும் சேர்த்து வெறும் 3 பேர் தான்.அய்யா வாங்க
சார் வாங்க
கொஞ்சம் தள்ளுங்க.
வண்டி இங்கேயே
நின்னுச்சுன்னா டிராபிக் ஜாம் ஆயுடும். . . . .
வாங்க
என்று நடத்துனர் வெற்றிலை பாக்கு வைத்து கல்யானத்திற்கு அழைப்பதைப் போல் அழைக்க மெலும் நான்கு பேர் வந்து சேர்ந்து கொண்டனர். மற்றவர்கள் எல்லாம் பேருந்துக்குள்ளேயே அமர்ந்திருந்தனர்,பேருந்தை தள்ளும் போது சற்றே கனத்தது, பேருந்தல்ல என் இதயம்.ஒரு வழியாக பேருந்து இயங்க ஆரம்பிக்க பேருந்தில் ஏறினேன். மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நான் அமர்ந்திருந்த இருக்கை எங்கே என்று தெரியவில்லை எல்லாம் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது.இந்த அளவிற்கா நாம் அறிவிழந்து சுயநலவாதியாகி விட்டோம். நாம் செல்லும் பேருந்து நின்று போய்விட்டது. நம் முயற்சியின்றி அதை இயங்க வைக்க முடியாது. அப்படி அது இயங்காமல் நின்று போனால் பாதிப்பு நமக்கு தான். இதை உணராமல் யாராவது நாலு இளிச்ச வாயங்க போய் தள்ளுவாங்க நாம வக்கனையா உட்கார்ந்திருப்போம் என்றுநாம் ஏன் இப்படி இருக்கிறோம்.நாம் சென்று கொண்டிருக்கிற பேருந்தை சரியாக இயங்க வைக்க கூட நாம் முன் வராத போது நம்முடைய சமுதாயம் நல்ல முறையில் நடக்க நாம் என்ன செய்ய போகிறோம்.நாம் ஏன் இப்படி . . . . .?

Wednesday, June 06, 2007

சென்னை மா நரகப் பேருந்துகள் [#26]

சென்னைக்கு வந்த நாட்கள் முதல் பெரும்பாலும் ரயில் போக்குவரததையும் ஷேர் ஆட்டோக்களையுமே தினசரி பயணங்களுக்கு பயண்படுத்தி வந்தேன், விடுமுறை நாட்களிலும் புதிய இடங்களுக்கு செல்லும் போது மட்டும் மாநகரப் பேருந்துகளை பயண்படுத்துவது வழக்கம். புதிய அலுவலகம் புதிய வேலை என்பதால் இப்போது மாநகரப் பேருந்துகளை மட்டுமே நம்பி பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

உலகிலேயே இத்தனை விதமான பேருந்துகள் சென்னையில் மட்டும் தான் இயக்கப் படுகிறது என்று நினைக்கிறேன்,
ரகம்குறைந்த பட்ச கட்டணம்
வெள்ளை போர்டு2 ரூபாய்பேருந்து தடம் எண் மற்று செல்லும் ஊர் பெயர்கள் வெள்ளை கலர் பலகையில் எழுதப்படிருக்கும்
மஞ்சள் போர்டு2.50 ரூபாய்பேருந்து தடம் எண் மற்று செல்லும் ஊர் பெயர்கள் மஞ்சள் கலர் பலகையில் எழுதப்படிருக்கும்
M சர்வீஸ்3 ரூபாய்பேருந்து தடம் எண்ணிற்கு முண்பாக M என்ற எழுத்து இருக்கும், உதாரணம் M5 கவனிக்க. M5 வேறு 5M வேறு
எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (அல்லது) பச்சை போர்டு பேருந்துகள்5 ரூபாய்
(கட்டணங்கள் எல்லாம் மஞ்சள் போர்டு வகை பேருந்து கட்டணத்தில் இரண்டு மட்டங்கு)
பேருந்து தடம் எண் மற்று செல்லும் ஊர் பெயர்கள் பச்சை கலர் பலகையில் எழுதப்படிருக்கும்
புளு லைன்நீல வண்ணப் பேருந்து
யெல்லோ லைன் மஞசள் வண்ணப் பேருந்து
ஆரஞ் லைன்ஆரஞ்ச் வண்ணப் பேருந்து


நான்கு வகையாக இருந்த பேருந்துகள் போதாது என்று புளு லைன், யெல்லோ லைன், ஆரஞ் லைன் வகை பேருந்துகளை அறிமுகப் படுத்தியது அரசு. இந்த புதுவகை பேருந்துகளில் அதிகம் இருப்பது டீலக்ஸ் பேருந்துகள் தான். இந்த டீலக்ஸ் வகை பேருந்துகளும் மஞ்சள் போர்டு பேருந்துகளின் கட்டணத்தைப் போல இரண்டு மடங்கு.இத்தனை வகையான பேருந்துகள் இருந்தும், மக்களின் பேருந்துப் பயணம் என்பது மிகவும் கஷ்டமானதாகவே உள்ளது. குறிப்பாக டீலக்ஸ் வகை பேருந்துகள் தற்போது அதிகமாக இயக்கப் படுகின்றன, புதிதாக அறிமுகப் படுத்தும் பேருந்துகளும் டீலக்ஸ் வகைகளாகவே இருக்கின்றன. மாநகரப் பேருந்துகளில் தினசரிப் பயணம் செய்பவர்களுக்கு இந்த டீலக்ஸ் பேருந்துகள் பெரும் சுமையாகவே இருக்கின்றன. பீக் அவர்களில் பேருந்தை நம்பி இருப்போர் வரும் பேருந்து எந்த வகையை சேர்ந்தது என்று பார்த்து பொருமையாக செல்ல முடியாது. என்ன தான் சொகுசுப் பேருந்தாக இருந்தாலும் சரி சாதாரண பேருந்தாக இருந்தாலும் சரி கூட்ட நெரிசலில் செல்லும் போது எல்லாம் ஒன்றுதான்.தினமும் பேருந்துக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டி உள்ளது.


இத்தனை ரகப் பேருந்துகள் இருந்தும், இத்தனை ரக கட்டணங்கள் இருந்தும், எந்தப் பேருந்து எத்தனை மணிக்கு வரும், எப்போது போய் சேர்வோம் என்று எதையுமே உறுதியாக சொல்ல முடியாது.


இந்த வகை சொகுசுப் பேருந்துகளால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை எல்லா லாபமும் அரசாங்கத்திற்கே. நிர்வாகத்தை சீர் படுத்தி லாபம் அதிகரிக்கச் செய்யாமல் இப்படி மக்களை அடித்துப் பிடுங்குகிறது அரசாங்கம். எங்கள் ஊர்களில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் சென்று பாடம் கற்றுக்கொள்ள சோல்ல வேண்டும் போக்கு வரத்து அமைச்சரையும் அரசாங்க அலுவலர்களையும். மேலும் தனியார் பேருந்துகளில் வேலை செய்பவர்களுக்கு தொழிற்சங்கம் அமைப்பு என்று எதுவும் கிடையாது அதனால் தான் மக்கள் அவர்களால் பயண் அடைகிறார்கள்

ஏம்பா இருக்கறதே 10 ரூபா தான் இதுல 7 ரூவா டிக்கெட்டுங்கிறியே நான்
எப்படி திரும்பி வற்றதுன்னு கேட்ட ஒரு மூதாட்டியை அன்பாக பேசி அடுத்த நிறுத்ததில்
இறக்கி விட்டார் நடத்துனர்.

இப்படி பலரையும் கஷ்டப்படுத்துகிறது இந்த
சொகுசு(?) பேருந்துகள்


சரி விடுங்க பஸ்ஸுக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன். . ..